எவ்வளவு விலை கூடினாலும் வாங்குவது குறையவில்லை.. தமிழக பெண்களிடம் உள்ள தங்கம் மட்டும் இத்தனை டன்களா?
சென்னை: எவ்வளவு தான் தங்கம் விலை கூடினாலும், தங்க நகைகள் வாங்குவது தமிழக மக்களிடம் குறையவில்லை என்று நகை வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது என்றும், வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை 150 சதவீதம் அதிகரிக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவது ஏழை எளிய மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பெரும்பாலானோர் தன் பிள்ளைகளுக்கு எப்படி தங்க நகைகளை வாங்கப் போகிறோமோ என்று கவலையடைந்துள்ளனர்.

விண்ணை முட்டும் தங்கம் விலை
கடந்த ஆண்டு டிசம்பர் முடியும் போது சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.56,880 ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் முதல் நாள் ஜனவரி 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57,200 ஆக இருந்தது. கடந்த மாதம் அதிகபட்சமாக தங்கம் விலை ரூ.97,600-க்கு விற்பனையானது. அதாவது கடந்த 10 மாதங்களில் சுமார் 40 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.
தங்கம் விலை வரலாற்றிலேயே 10 மாதங்களில் இவ்வளவு அதிகம் கூடியதே கிடையாது என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை இப்படி விண்ணை முட்டும் அளவுக்கு புதிய உச்சம் தொட்டிருப்பது சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்குவது இனி கனவில் தான் நடக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் அபிப்ராயமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, தங்கம் விலை எவ்வளவு கூடினாலும், நகைகள் விற்பனை குறையவில்லை என்று நகை வியாபாரிகள் சொல்கிறார்கள்.
எவ்வளவு விலை கூடினாலும்
தங்கம் விலை கூடிக்கொண்டு செல்லும் போது எப்படி நகைகள் விற்பனை குறையவில்லை என்பது பலருக்கும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு நகை வியாபாரிகள் கூறுகையில், கொஞ்சம் விலை குறைந்த பிறகு தங்க நகைகள் வாங்கலாம் என ஒரு சிலர் நினைத்தாலும், ஒரு சிலரோ இன்னும் கூடிவிடக் கூடாது என்பதற்காக இப்போதே வாங்கிவிடுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
6,720 டன் தங்கம் உள்ளது
அவர்கள் மேலும் கூறியதாவது:- தங்கம் விலையை நம்மால் எப்படி கணிக்க முடியாதோ, அதேபோல மக்களின் மனநிலையையும் நம்மால் கணிக்கவே முடியாது. உலக தங்க கவுன்சில் கணக்கீட்டின் படி, தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது. இது அமெரிக்கா நாட்டில் கையிருப்பில் இருக்கும் தங்கத்திற்கு சமம். அமெரிக்காவில் 8,133.46 டன் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யாவில் கையிருப்பில் உள்ள தங்கத்தை விட நம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் தங்கத்தில் அளவானது அதிகமாகும். தங்கத்தை வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் தமிழக மக்கள் செல்வம் போன்று சேமித்து வைக்கிறார்கள். பழங்காலத்தில் இருந்தே தங்க நகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பு மட்டுமின்றி அவசரத்து நிதி உதவிக்காகவும் தங்க நகைகளே கை கொடுக்கிறது.
சேமிப்பதில் மக்கள் ஆர்வம்
எனவே தங்க நகைகளானது ஒரு குடும்பத்திற்கு சேமிப்பு மட்டும் பொருளாதார பாதுகாப்பினையும் வழங்குகிறது. இதனால் தான் தங்க நகைகள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதேபோன்று சில கவுரவத்திற்காகவும் தங்க நகைகளை வாங்கி சேமித்து வருகிறார்கள். கடந்த 1968 ஆம் ஆண்டில் மத்திய அரசு தங்க கட்டுப்பாட்டு சட்டத்தை அமுல்படுத்தியது.
இதனால் தங்க நாணயங்கள் தங்க கட்டிகள் வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் தங்க கட்டிகள், நாணயங்களை நகை தொழிலாளர்களை வைத்து அழித்து நகைகளாக மாற்றியதாகவும் அப்போதில் இருந்து தங்க நகைகள் சேமிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று கூறினர்.
2028 ஆம் ஆண்டுக்குள்
இது பற்றி தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:- "தங்க நகைகள் சேமிப்பது தமிழர்களின் பாரம்பரியமாக இருக்கிறது. சிலர் இதனை வருமானமாக பார்ப்பதைவிட செல்வமாக கருதுகின்றனர். வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலையானது 150 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 8 முதல் 10 சதவீதம் விலை அதிகரித்து வருகிறது" என்று கூறினார்.
-
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications