Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 30 நாட்களில்.. மொத்த தேர்தல் ஆட்டத்தையே.. புரட்டி போட்ட ஸ்டாலின்.. யோசிக்க முடியாத மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக கடந்த 30 நாட்களில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. இவை தேர்தல் முடிவையே மாற்றும் அறிவிப்புகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சில அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரியாக பெண்கள், மாணவர்கள், குடும்ப வாக்குகளை கவரும் வகையில் முக்கியமான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.

Pongal

அறிவிப்பு 1 - பொங்கல் பரிசு

முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு சிறப்புப் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தொகுப்பில் ₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலைகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்பாக விநியோகிக்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.

எப்படி பொங்கல் பரிசு வாங்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இது மிகவும் எளிமையானதே. உங்களுக்கு ஒரு டோக்கன் ரேஷன் கார்டு அடிப்படையில் நாளை முதல் வழங்கப்படும். டோக்கன் கிடைத்தவர்கள் அதை காட்டி ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம்..

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்று உள்ளன. தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது.

அறிவிப்பு 2 - பென்சன் திட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காகப் புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூவர் ஓய்வூதியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழு, பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கு ஏற்ற புதிய மாதிரித் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது.

TAPS திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதித் தேவையை மாநில அரசே ஏற்கும். இத்திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு ₹13,000 கோடி கூடுதல் செலவு அரசுக்கு உடனடியாக ஏற்படும்.

பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு உண்டு. ஒரு ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகப் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஓய்வு அல்லது பணி மரணத்தின்போது, சேவை காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

தகுதிச் சேவைக்காலம் நிறைவு செய்யாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, TAPS அமலுக்கு முன்னர் ஓய்வூதியம் பெறாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு 'சிறப்பு கருணை ஓய்வூதியம்' உண்டு. மேலும், ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி அரசு பங்களிக்க வேண்டும், இது ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்து அதிகரிக்கக்கூடும்.

அறிவிப்பு 3 - கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. இந்த நொடியில் தமிழ்நாட்டில் இரண்டு கோடி பேர் வரை இந்த திட்டம் மூலம் நேரடியாக நிதி பெறுகிறார்கள். முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.

இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. அதன்படி கூடுதல் மகளிருக்கு கடந்த டிசம்பரில் இருந்து பணம் அனுப்பப்பட்டு வருகிறது

அறிவிப்பு 4 - லேப்டாப்

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் இன்று தொடங்க உள்ளது.

வழங்கப்படும் மடிக்கணினிகள், இன்டெல் கோர் ஐ3 (Intel Core i3) அல்லது ஏஎம்டி ரைசன் (AMD Ryzen) செயலிகளுடன் (processors) வரும். இவை, மேம்பட்ட செயல்திறனை உறுதி செய்யும். மேலும், 8ஜிபி ரேம் (RAM), 14 அல்லது 15.6 இன்ச் திரைகள் (displays) மற்றும் வேகமான தரவு பரிமாற்றத்திற்காக யுஎஸ்பி-சி (USB-C) போர்ட் ஆகியவை இந்த மடிக்கணினிகளில் இடம்பெறும்.

நான்கு மையச் செயலிகள் (quad-core processors) இருப்பதால், மாணவர்கள் 4K வீடியோக்களைப் பார்க்கவும், திட்டப் பணிகளைத் திருத்தவும் முடியும். இத்துடன், இலவச மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 சந்தாவும் (subscription) சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏஐ தொடர்பான பாடத்திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதை படிக்க லேப்டாப் அவசியம்.

தமிழக மாணவர்களை உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஏற்கனவே நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. இது போன்ற திட்டங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட லேப்டாப் அவசியம். தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பல நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் பின்தங்காமல் இருக்க லேப்டாப் அவசியம்.

அதோடு மிக முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான வசதிகள், வாய்ப்புகள் தேவை. அதற்கு லேப்டாப் அவசியம். அரசு லேப்டாப் தர வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கையாக வைத்தனர். அதிமுக காலத்தில் திட்டம் நின்று போனாலும் திமுக தரவில்லை என்ற பிம்பம் இருந்தது. அது திமுக மீது குறையாக இருந்தது. இதை சரியாகி உள்ளது.

அதோடு டேட்டாபடி இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் ஏற்கனவே பல லட்சம் பேர் பலனடைந்து உள்ளனர். மீண்டும் கொண்டு வந்தால் அது பல லட்சம் பேருக்கு உதவும். நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் பல தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களுக்கு லேப்டாப் இல்லாத காரணத்தால் சிரமப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப் பெரிய உதவியாக இருக்கும். இதையடுத்தே . மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கணினிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மடிக்கணினி விநியோகத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+