இது கிரிமினல் குற்றம்.. ரூ.500 கோடியில் படம் எடுக்க சொன்னது யார்? ஜனநாயகனால் கொதித்த எஸ்வி சேகர்
சென்னை: ‛‛சென்சார் போர்டு எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் தான் சான்று. படம் மறு தணிக்கைக்கு செல்கிறது. அப்படியிருக்கும்போது யூ/ஏ சான்று என்று அறிவித்தார்கள். இது கிரிமினல் குற்றம். சென்சார் ஆகாமல் சென்சார் சான்று வாங்காமல் ரிலீஸ் தேதியை அறிவிப்பது ஒரு குற்றம். சட்டத்தை படித்து பாருங்கள். நான் சட்டப்படி தான் சொல்கிறேன். ரூ.500 கோடியில் யார் படம் எடுக்க சொன்னார்கள்? சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகும்போது சட்ட ரீதியான நடவடிக்கை தான் எடுக்கப்பட்டுள்ளது''என்று முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினரும், நடிகருமான எஸ்வி சேகர் கூறினார்.
விஜயின் கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' சென்சார் சான்று கிடைக்கால் நேற்று வெளியாகவில்லை. இந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛ஜனநாயகன்' திரைப்படம் குறித்து முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினரான நடிகர் எஸ்வி சேகரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள ஜனநாயகனுக்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை. சென்சார் போர்டுக்கு மனிதாபிமானம் வேண்டாமா?'' என்று எஸ்வி சேகரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகர் எஸ்வி சேகர், ‛‛ரூ.500 கோடியில் யார் படம் எடுக்க சொன்னார்கள்? அப்படியென்றால், ரூ.10 கோடி, ,ரூ.1 கோடி, ரூ.50 லட்சத்தில் எடுக்கக்கூடிய படங்கள் எல்லாம் படம் இல்லையா? சென்சார் போர்டுக்கு எல்லாமே படம் தான். ரயிலில் டிக்கெட் வாங்குவது போல் தான். டிக்கெட் வாங்குபவர் கோடீஸ்வரனா? எவ்வளவு சொத்து இருக்கிறது? என்பது எல்லாம் பார்க்க மாட்டார்கள். கையில் டிக்கெட் இருக்கிறதா? என்பதை தான் பார்க்க வேண்டும்.
அதுபோல் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகும்போது சட்ட ரீதியான நடவடிக்கை தான் எடுக்கப்பட்டுள்ளது. நான் பாஜக கிடையாது. பாஜகவை விட்டு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாஜகவுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. அதேசமயம் ஏதாவது பிரச்சனை என்றால் அதனை அரசியலாக்கி, சென்சார் போர்டு அவங்ககிட்ட இருக்கு? அமித்ஷா பண்கிறார் என்று சொல்வது நியாயமானது கிடையாது.
அதேபோல் சென்சார் போர்டு எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் தான் சான்று. கொம்பன் படத்துக்கு படம் மறு தணிக்கைக்கு செல்கிறது. அப்படியிருக்கும்போது யூ/ஏ சான்று என்று அறிவித்தார்கள். நான் கேட்டேன் எப்படி யூ/ஏ சான்று என்று சொல்ல முடியும்? இது கிரிமினல் குற்றம். சென்சார் ஆகாமல் சென்சார் சான்று வாங்காமல் ரிலீஸ் தேதியை அறிவிப்பது ஒரு குற்றம்.சட்டத்தை படித்து பாருங்கள். நான் சட்டப்படி தான் சொல்கிறேன்'' என்றார்.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications