பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் இல்லை! உங்கள் இஷ்டத்துக்கெல்லாம் செய்ய முடியாது! நீதிபதிகள் கண்டனம்
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைக் குழு மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் U/A சான்றிதழ் வழங்குமாறு தனிநீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி தடை விதித்தார். இந்த வழக்கும் ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படமாக 'ஜனநாயகன்' திரைப்படம் பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் இன்று (ஜனவரி 9) வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. படத்தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கில், இன்று காலை 10:30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா தீர்ப்பு வழங்கினார்.
இன்று படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த சூழலில், உயர்நீதிமன்ற தீர்ப்பும் அதே நாளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக இரவு படக்குழு அறிவித்தது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டிருந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, முன்பதிவு செய்தவர்களுக்குப் பணத்தைத் திரும்ப அனுப்பும் பணிகளும் தொடங்கின. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் படமென்பதால், 'ஜனநாயகன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவியது. வெளியீட்டுக்கான அனைத்துப் பணிகளும் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், கடைசி நேர சிக்கலால் அவை அனைத்தும் முடக்கப்பட்டன. தணிக்கைப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வராததால், படம் எப்போது வெளியாகும் என்ற புதிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
'ஜனநாயகன்' படத்திற்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் விதமாக தணிக்கை வாரியம் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர். திரைப்பிரபலங்களைத் தாண்டி, அரசியல் கட்சி நிர்வாகிகளும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரிஷ் சோடங்கர், எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.பி. ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் பாஜக அரசை விமர்சித்திருந்தனர். அதே சமயம், இந்தப் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்ற கருத்தும் மேலோங்கியது.
'இந்தப் பிரச்சனைக்கு, நடிகர் விஜய் அல்ல, அரசியல்வாதி விஜய் தகுந்த பாடம் புகட்டுவார்' என ஒரு குரல் ஓங்கி ஒலித்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆஷா தீர்ப்பளித்தார். அதில் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக U/A சான்று வழங்க உத்தரவிட்டார். மேலும் மறுதணிக்கைக்கான உத்தரவையும் அவர் ரத்து செய்தார்.
இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை குழு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை திங்கள்கிழமை அன்று விசாரிக்குமாறு கேட்டதற்கு, முதலில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள் பிறகு எப்போது விசாரணை என்பதை நாங்கள் சொல்கிறோம் என நீதிபதி தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததும் இன்று 3.30 மணிக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், படத்திற்கு தணிக்கை சான்றிதழே பெறாமல் எப்படி ரிலீஸ் தேதியை அறிவித்தீர்கள். குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என கூறி போலி ்அழுத்தம் தரப்படுகிறது. ஒரு தேதியை நீங்களே நிர்ணயித்துவிட்டு நீதிபதிகளுக்கு அழுத்தம் தர முடியாது.
பல்வேறு நடைமுறைகள் உள்ள போது சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டீர்கள் என்பதற்காக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது என கண்டித்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். எனவே பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸாகாது. எனவே வரும் 23 ஆம் தேதி படம் ரிலீஸாக வாய்ப்புள்ளது.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications