Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படத்திற்கு சிக்கல்.. பெரிய கை துஷார் மேத்தாவை இறக்கும் டெல்லி.. முழு பவரை காட்ட முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய தணிக்கை வாரியம் சார்பாக ஜனநாயகன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் ஆஜராக உள்ளார்.

ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் முறையீடுசெய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார். திங்கள் கிழமை மேல்முறையீடு மனுவை விசாரிக்க தணிக்கை வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Vijay tvk jananayagan

ஜனநாயகன் படம் மேல்முறையீடு

விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜனநாயகன் தரப்பு வைத்த சில முக்கியமான வாதங்கள் வழக்கு வெற்றிபெற காரணமாக அமைந்தது.

இந்த நிலையில்தான் ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அளவிற்கு CBFC இந்த படத்தை வேகமாக எதிர்க்க என்ன காரணம்.. இதற்கு பின் என்னதான் பிரச்சனை இருக்கிறது என்று பார்க்கலாம். கடந்த முறை இந்த வழக்கில்.. கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் ஆஜரான நிலையில் இந்த முறை மேல்முறையீட்டு வழக்கில்.. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய தணிக்கை வாரியம் சார்பாக ஜனநாயகன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் ஆஜராக உள்ளார்.

இவர் ஆஜராவதால்.. வழக்கில் ஜனநாயகன் தரப்பிற்கு பெரிய அளவில் அழுத்தம் மற்றும் சிக்கல் ஏற்படலாம்.

ஜனநாயகன் வழக்கில் என்ன நடந்தது?

ஜனநாயகம் படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே படத்தை எதிர்க்கு முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது.

முன்னதாக 'அமரன்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, படப்பிடிப்பு முடிந்ததும் பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான காரணத்தை விளக்கி, தணிக்கை வாரியத்திற்குச் சமர்ப்பிக்கும் முன்பே தடையில்லா சான்றிதழைப் பெற்றனர்.

'அமரன்' குழு ஒருபடி மேலே சென்று, வெளியீட்டிற்கு முன்பே ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினருக்குச் சிறப்புத் திரையிடல்களை நடத்தியது. பின்னூட்டங்களைப் பெற்று, ஆட்சேபணைகளையோ அல்லது தவறான புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இல்லை என்பதை உறுதிசெய்தனர்.

இத்தகைய முன்னுதாரணங்கள் இருந்தும், 'ஜனநாயகன்' குழு இதே அணுகுமுறையைப் பின்பற்றாதது ஆச்சரியமளிக்கிறது. ஜனநாயகன் குழு இந்த படத்தில் ராணுவ சின்னங்களை பயன்படுத்த NOC வாங்கவில்லை. அதுவே படம் இப்போது சிக்கலவாதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

ஜனநாயகன் படத்தின் தணிக்கை பிரச்சனை ஆவாதற்கு, படத்தில் உள்ள மத ரீதியிலான கருத்துக்களே காரணம் என்று கூறப்படுகிறது. படத்தில் வில்லன் போடும் கெட்ட திட்டத்திற்கு o - m என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதுவே படம் வெளியாவதில் சிக்கலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அதாவது o - m என்பது OM என்பதை குறிப்பிடுவது போல இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் முக்கியமான மத சொல், மந்திர சொல்லான OM என்பதை வில்லன் போடும் திட்டத்திற்கு வைத்துள்ளது. ஜனநாயகன் படத்தின் டிரைலரில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதான் படத்திற்கு தணிக்கை கிடைக்க சிக்கல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வாரியம் பரிந்துரைத்த சிறிய மாற்றங்களுக்கும் படக்குழு சம்மதித்தபோதிலும், சான்றிதழ் இன்னும் நிலுவையில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+