பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3 ஆயிரம்.. பயனாளிகளுக்கு தரத்துடன் வேண்டும்.. அதுவும் ஊழலின்றி: தமிழக பாஜக
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதன் காரணமாக தற்போது ரூ.3 ஆயிரம் அறிவித்திருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள நிலையில், தமிழக பாஜகவும் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளது.. அது என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் திமுக அரசு பொறுப்பேற்ற 2022ஆம் ஆண்டு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும் கரும்பும் வழங்கப்பட்டது.
ரேஷனில் ரொக்கப் பரிசு
2023 , 2024 ஆண்டுகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்... ஆனால் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க போகிறது.. அதனால் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுவாகவே எழுந்து வந்தது..
இந்நிலையில், தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது இதுவரை அறிவிக்கப்பட்ட பொங்கல் ரொக்கப் பரிசுகளில் அதிகமான தொகையாகும். அதாவது கடந்த முறை எடப்பாடி பழனிசாமி அறிவித்த தொகையைவிட அதிகமாகும்.
ஆனாலும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பினால் திருப்தியடையவில்லை.. இந்த முறை மக்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.. இது தொடர்பாக போஸ்டர்களையும் அடித்து ஒட்டி வருகிறார்கள்..
ரூ.3000 பரிசுத் தொகுப்பு
அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதன் காரணமாக தற்போது ரூ.3 ஆயிரம் அறிவித்து உள்ளனர்.. அதிமுக ஆட்சி வந்த உடன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளார்..
அதாவது திமுக அரசு தற்போது அறிவித்துள்ள தொகையானது, அதிமுக வலியுறுத்தியதன் பேரில் மட்டுமே கிடைத்ததாக தெரிவித்துள்ளார்...
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகையை தரமானதாக வழங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.. அது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
தமிழக பாஜக வானதி சீனிவாசன்
அந்த கோரிக்கையில், "அண்மையில் கோவையில் நடந்த இயற்கை விவசாய நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்தார். தற்போது, பாஜக விவசாய அணி சார்பில், ஈரோட்டில் துவங்கியுள்ள மாநில விவசாயிகள் மாநாட்டில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார்.
கடந்த தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தி.மு.க., உறுதியளித்தது. ஆனால், இப்போது புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை, அதுவும் அரசு ஊழியர்களின் கடும் போராட்டம் தந்த அழுத்தம் காரணமாக அறிவித்திருக்கிறது.
தரமான பொங்கல் பரிசு தொகுப்பு
தேர்தலை மனதில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பை ஊழல் இல்லாமல் தரமானதாக வழங்க வேண்டும்.
"அப்பா'" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதில், தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், மத்திய அரசையும், பெற்றோரையும் கைகாட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications