Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Survey: 2026லும் கோவை அதிமுக கோட்டை தானாம்.. அடித்துச் சொல்லும் சத்தியம் டிவி சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கிறது சத்தியம் டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு நான்கு முனைப் போட்டியை சந்திக்கப் போகிறது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் டஃப் ஃபைட் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2026 assembly election dmk aiadmk bjp tvk

இந்நிலையில் மக்களிடம் நேரடியாக சென்று பல்வேறு நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன. அந்தவகையில், சத்தியம் தொலைக்காட்சி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொகுதிகளிலும் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அலசி உள்ளது சத்தியம் டிவி.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளின் படி, 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் இழுபறி நிலை ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 assembly election dmk aiadmk bjp tvk

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றி இருந்தது. அதிமுகவின் கோட்டையாக கோவை மாவட்டம் கருதப்பட்டு வருகிறது. இதைத் தகர்க்க செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

2026 assembly election dmk aiadmk bjp tvk

உள்ளாட்சி தேர்தலில் கோவையில் வெற்றிக் கொடி நாட்டிய திமுக, கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் வென்றது. எனினும், 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக கையே கோவையில் ஓங்கும் என்கிறது சத்தியம் டிவி சர்வே ரிசல்ட்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+