காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று இரவு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், யார் யாருக்கு வாய்ப்பு என்ற உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அதே நேரம் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து எந்தெந்த தொகுதிகள் எனவும் திமுக தலைமை இறுதி செய்தது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் 6ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று இரவு நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, உடனடியாக காங்கிரஸ் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் இன்று இரவு அறிவிக்கிறார்
செவ்வாய்க்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் அறிவிக்கப்படாதததால், 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்.
இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஈரோட்டில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், "ஈரோடு கிழக்கு தொகுதியின் அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது மகன் திருமகன் ஈவேராவும் நின்று வெற்றி பெற்ற தொகுதி. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளாரை அன்பு சகோதரர் ராகுல் இன்று இரவுக்குள் அறிவிக்க இருக்கிறார்" எனப் பேசியிருந்தார்.
காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்
1. பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர் (அல்லது) ரஞ்சன்குமார் (அல்லது) இமயா கக்கன்
2. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர் - முனிரத்தினம் (அல்லது) அறிவழகன் (அல்லது) பொன்னம்பலம்
4. உதகமண்டலம் - கணேஷ் குமார் (அ) பிரியா கஸ்மிகர்
5. ஈரோடு கிழக்கு - கோபிநாத் (அல்லது) மக்கள் ராஜன் (அல்லது) EVKS சஞ்சய்
6. அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்
7. கடலூர் - A.S.சந்திரசேகர் (அல்லது) PV ராஜேந்திரன் (அல்லது) ராதாகிருஷ்ணன்
8. மயிலாடுதுறை - ஜமால் யூனுஸ் (அல்லது) முகமது ஹசினா சையத் (அல்லது) ராஜ்குமார்
9. காரைக்குடி - மாங்குடி
10. சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன் (அல்லது) சொக்கர்
11. திருவாடனை -R.M.கருமாணிக்கம்
12. திருவைகுண்டம் - ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்
13. நாங்குநேரி - ரூபி. ஆர்.மனோகரன் (அல்லது) காமராஜ்
14. குளச்சல் - ஜே.ஜி.பிரின்ஸ் (அல்லது) லாரன்ஸ் (அல்லது) பினு லால்
15. விளவங்கோடு - தாரகை கத்பர்ட்
16. கிள்ளியூர் - எஸ்.ராஜேஷ்குமார்
17. வேளச்சேரி - JMH அசன் மௌலானா (அல்லது) ஹசீனா சையத்
18. ஊத்தங்கரை (தனி) - குப்புசாமி (அல்லது) ஆறுமுகம்
19. துறையூர் (தனி) - எம்.லெனின் பிரசாத்
20. கவுண்டம்பாளையம் - சூர்யபிரகாஷ் (அல்லது) சக்திவேல் கவுண்டர் (அல்லது) வி.எம்.சி மனோகர்
21. ஆத்தூர் (தனி) - அர்த்தனாரி
22. பென்னாகரம் - ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் (அல்லது) சுமதி அன்பரசு
23. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார் (அல்லது) ஸ்ரீநிதி
24. அம்பாசமுத்திரம் - வி.பி.துரை (அல்லது) காமராஜ்
25. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லகுமார்
26. உசிலம்பட்டி - S.O.R.இளங்கோவன் (அல்லது) ராஜா முஹம்மது (அல்லது) கார்த்திகேயன்
27. சங்கரன்கோவில் - பாக்கியராஜ் (அல்லது) சிவசுப்பிரமணி (அல்லது) வெள்ளைப்பாண்டி
28. மேலூர் - CR. சுந்தராஜன் (அ) நித்யபிரியா (அல்லது) ரவிச்சந்திரன் (அல்லது) கார்த்திகேயன்
இவர்களுக்கு சீட் உறுதி செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications