லோன் தள்ளுபடி, மானியம்! வளர்ப்பு கட்டண உயர்வு கோரும் கறிக்கோழி பண்ணையாளர்கள்! சபாஷ் கொங்கு ஆறுமுகம்
சென்னை: கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொங்கு மக்கள் முன்னணி தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளது.. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கோரிக்கை மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கோழிப்பண்ணை, குறிப்பாக கறிக்கோழி வளர்ப்பிற்கு கூட்டுறவு வங்கி, எஸ்பிஐ வங்கி உள்ளிட்டவைகளில் கடன் பெறலாம்.

கூட்டுறவு வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களுக்கு ஏற்றவை. இங்கே பண்ணை கட்டடம், உணவு, மருந்து, ஊழியச் செலவுகள் போன்றவற்றுக்கு கடன் தரப்படுகிறது. சில சமயங்களில் சிறப்பு மானியம், SC/ST/பெண்கள் ஆதரவு போன்றவையும் கிடைக்கும். வட்டி சுமார் 14-16% இருக்கும்.
எஸ்பிஐ, கூட்டுறவு வங்கி கடன் வசதி
எஸ்பிஐ மற்றும் பிற பெரிய வங்கிகள், புதிய அல்லது பெரிய பண்ணை திட்டங்களுக்கு அதிக தொகை கடன் வழங்குகின்றன. இவை சாதாரணமாக 7-9% வட்டி விகிதத்தில் கிடைக்கும். NABARD refinance, அரசுத் திட்டங்களுடன் சேர்ந்து, வங்கி மூலம் கடன் எடுக்கலாம். இவ்வாறான வசதிகள் இருந்தாலும் கோழிப்பண்ணையாளர்களுக்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
கரிமூட்டை ரூ.500 ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரையும், தொழிலாளர் சம்பளம் ரூ.400ல் இருந்து ரூ. ஆயிரம், கரண்ட் பில் என அனைத்தும் உயர்ந்துள்ளது..
ஆனால் குஞ்சுகளை தரும் கம்பெனிகள் ஒரு கிலோவுக்கு ரூ.6.50 தான் தருகின்றன. இதனால் கட்டுப்படியாகவில்லை என்று கூறி கடந்த ஜனவரி 1 முதல் பண்ணையாளர்கள் கம்பெனிகளுக்கு குஞ்சுகளை வளர்த்துத் தர மறுத்து, அவற்றை வாங்க மறுக்கின்றனர்.
கறிக்கோழிக்கு கிராக்கி
இதனால் கறிக்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டு, கிலோ ரூ.210க்கு விற்ற சிக்கன் விலை சில இடங்களில் ரூ.280 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது..
கிலோவுக்கு ரூ.6.50 என்பதை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். இதற்கு குஞ்சு தரும் நிறுவனங்களை அரசுகள் அழைத்துப் பேச வேண்டும். மானியம், கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெடித்து வருகிறது.. தற்போதைக்கு கறிக்கோழி வளர்ப்பு தான் விவசாயிகளுக்கு பேருதவியாய் இருந்து வருகிறது.
ஆனால் மிகக் குறைவான கூலி வழங்கப்படுவதால், கோழிப்பண்ணையாளர்கள் கடன் நெருக்கடியில் தவித்து வருவதாக தெரிகிறது..
கோழிப்பண்ணைக்கு மின்சாரம்
குறிப்பாக விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணைக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். 50 கிராம் எடையுள்ள தரமான கோழி குஞ்சுகளையும், தரமான தீவனங்களையும் ஆண்டுக்கு 5 முறை வழங்க வேண்டும். பண்ணையாளர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பண்ணையாளர்கள் தொடர்ந்து விடுத்தபடி உள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில் கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் மிக முக்கியமான வேண்டுகோளை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்..
கொங்கு மக்கள் முன்னணி ஆறுமுகம்
ஆறுமுகம் சொல்வதாவது, "விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு என்பது விவசாயிகளின் முக்கியமான சார்பு தொழிலாக இருந்து வருகிறது.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள்
கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு தேவையான குஞ்சுக் கோழிகள் மற்றும் தீவனங்களை நிறுவனங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும், வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வழங்கிடுவதோடு அதன் வளர்ப்புக்காக கிலோக்கு சுமார் சராசரியாக ரூ.6 என்ற அளவில் மட்டுமே தொகையை நிர்ணயம் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த தொகையை நிர்ணயிப்பதும், அதில் ஏற்படும் உயர்வு-குறைவு ஆகியவற்றை தீர்மானிப்பது முழுமையாக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் மறுபுறம், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்படும் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
குறிப்பாக தேங்காய் மஞ்சி தூள், கரி, தொழிலாளர்கள் கூலி, லாரி தண்ணீர் செலவு, மின் கட்டணம், பண்ணை பராமரிப்பு மற்றும் கட்டிடத்திற்கான முதலீடு என பல்வேறு செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடுமையான உழைப்பைத் தவிர வேறு எந்த லாபமும் கிடைக்காத வேதனையான நிலை தான் பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு - வளர்ப்பு கட்டணம்
எனவே கோழிப்பண்ணை உரிமையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டு, வளர்ப்பு கட்டணத்தை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு நிறுவனங்கள் செய்யத் தவறும் பட்சத்தில், இந்தத் துறையில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும், பெரும் வணிகமாகவும், பொதுமக்களின் முக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்து வரும் கறிக்கோழி தொழில் எந்தவித தடையுமின்றி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமெனில், தற்காலிக தீர்வுகளுடன் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இந்தத் தொழில் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் வகையில் கோழிப்பண்ணை தொழிலுக்கென தனியான ஒரு ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications