வீட்டுக்கு வரும் 'SIR'.. உங்கள் வாக்குரிமையை தக்க வைக்க வேண்டுமா? இதை மட்டும் மறந்துறாதீங்க மக்களே!
சென்னை: தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் யார் வாக்காளர் பட்டியலில் தொடர்கிறார்கள், யாரின் பெயர் நீக்கப்படுகிறது என்பது தீர்மானிக்கப்படும். எனவே, நீண்டநாள் வாக்காளராக இருந்தாலும், வாக்குரிமையைத் தக்கவைத்துக்கொள்ள சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியுள்ளன. டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து, திருத்தப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.
இதன் நோக்கம் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவற்றை நீக்குவது போன்றவை அடங்கும் என்கிறது தேர்தல் ஆணையம்.

வாக்காளர் திருத்தம்
சரி, இந்த பணியின் மூலம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்படும் என்றாலும், ஒரு வேளை தவறுதாலாகக் கூட உங்கள் வாக்குரிமை பறிபோகலாம், எனவே கீழ்கண்ட நடைமுறைகளை சரியாக செய்வதன் மூலம் உங்கள் வாக்குரிமை பாதுகாக்கப்படும். தேர்தல் ஆணையம் வழங்கும் சிறப்பு படிவம் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படும். அதில் வாக்காளரின் பெயர், புகைப்படம், வாக்காளர் அடையாள எண், முகவரி, வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் இதை பெற்றுக்கொண்டு தங்களது பிறந்த தேதி, கைப்பேசி எண், ஆதார் எண், தந்தை அல்லது தாயின் பெயர் போன்ற விவரங்களை நிரப்பி, குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம்
மேற்கண்ட படிவத்தை நிரப்பிய பிறகு ஒரு பிரதியை ஒப்படைக்கவும், மற்றொரு பிரதியை உங்களிடம் வைத்துக் கொள்ளவும் வேண்டும். ஜெராக்ஸ் பிரதியை கொடுக்க முடியாது என்பதால், மிகுந்த கவனத்துடன் நிரப்புவது அவசியம். உங்கள் புகைப்படம் பழையதாக இருந்தால் புதிய புகைப்படத்தையும் வெள்ளை பின்னணியில் ஒட்டி வழங்க வேண்டும். நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அலுவலர்கள் வரும் சூழல் ஏற்பட்டால், அவர்கள் படிவத்தை உங்கள் வீட்டின் கதவின் முன் அல்லது அண்டை வீட்டாரிடம் படிவத்தை கொடுப்பார்கள்.
வாக்காளர் விவரம் சரிபார்ப்பு
அதை பெற்று நிரப்பி அவர்களிடம் கொடுக்க வேண்டும். அலுவலர்கள் குறைந்தது மூன்று முறை வருவார்கள்; மூன்று முறையும் நீங்கள் வீட்டில் இல்லையென்றாலோ, உரிய படிவங்களை நீங்கள் கொடுக்காவிட்டாலோ உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த திருத்தப்பணிகள் முடிந்ததும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும். அதில் பெயர் தவறவிட்டிருந்தால், டிசம்பர் 9 முதல் ஜனவரி 1 வரை நீங்கள் விண்ணப்பித்து திருத்த முடியும். பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு
வாக்காளர் விவரங்கள் மாற்றம் அல்லது இடமாற்றம் செய்திருந்தால், அதற்கான படிவங்களும் நிரப்பப்பட வேண்டும். படிவம் 6 - புதிய வாக்காளராக சேர்வதற்கு, படிவம் 7 - பெயர் நீக்கம் அல்லது இறப்பு விவரம் சேர்க்க, படிவம் 8 - பெயர், முகவரி, வயது திருத்தம், படிவம் 8A - தொகுதி மாற்றத்திற்கான விண்ணப்பம். இவை அனைத்தையும் eci.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், தேர்தல் அலுவலகம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். எந்தவொரு சந்தேகத்திற்கும் 1930 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து விளக்கம் பெறலாம்.
வாக்காளர் படிவம்
மிக முக்கியமாக, தேர்தல் ஆணையம் வழங்கும் இந்த படிவத்தை நிரப்பி வழங்காவிட்டால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். எனவே உங்கள் வாக்குரிமையை தக்க வைத்துக் கொள்ள, அலுவலர்கள் வரும் போது படிவத்தைப் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து கொடுக்குவது மிகவும் அவசியம். இது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கான முக்கிய நடைமுறை என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
-
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications