வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்
சென்னை: "அண்ணா நகர்ல வேலை செஞ்சா, வில்லிவாக்கத்துல சீட் கொடுப்பாங்க!" - இதுதான் இப்போது சென்னை தி.மு.க-வின் லேட்டஸ்ட் டாக். ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிரான வெயிட்டான கையை களமிறக்கி உள்ளது திமுக.
நேற்று அறிவாலயம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், வில்லிவாக்கம் தொகுதி பலரது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது. அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே.மோகனின் வாரிசு கார்த்திக் மோகனுக்கு இந்த முறை வில்லிவாக்கம் 'டிக்' அடிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை காலமும் அண்ணா நகர் ஏரியாவையே சுற்றிச் சுற்றி வந்து, அங்கேயே களப்பணிகளை முடுக்கிவிட்ட கார்த்திக்கை, அப்படியே பக்கத்துத் தொகுதிக்கு ஷிப்ட் செய்திருக்கிறது தி.மு.க தலைமை.

ஏரியா மாறினாலும் வியூகம் மாறுமா?
வில்லிவாக்கம் என்பது வெறும் தொகுதியல்ல; அது ஒரு மினி அண்ணா நகர். கட்சி வாக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும், 'தீர்மானிக்கும் சக்தி' என்னவோ பொது வாக்காளர்களின் கையில்தான் இருக்கிறது. இங்குதான் கார்த்திக் மோகனுக்கு சவால் காத்திருக்கிறது.
கார்த்திக் மோகன் அடிப்படையில் ஒரு 'ஆர்கனைசேஷன் மேன்'. கட்சி கட்டமைப்பை விரல் நுனியில் வைத்திருப்பவர். இளைஞர். ஆனாலும் களத்தில் அனுபவம் உள்ளது. ஆனால், அவர் எதிர்கொள்ளப்போகும் நபர் சாதாரண ஆள் இல்லை - தவெக-வின் ஆதவ் அர்ஜுனா! இதற்கு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனாலும் பெரும்பாலும் ஆதவ் அர்ஜுனவே இங்கே நிற்பார் என்கிறார்கள்.
கார்த்திக் மோகன்: ஷார்ப் மைண்ட், பக்காவான ஸ்கெட்ச், பின்னால் நிற்கும் தி.மு.க-வின் அசைக்க முடியாத பேரியக்க கட்டமைப்பு. அதே சமயம் நிறைய கிரவுண்டு வேலைகளை செய்ய கூடியவர். களத்திலேயே இருக்க கூடியவர்.
ஆதவ் அர்ஜுனா: எனர்ஜியான இளமை, புதுக்கட்சியின் வேகம், சாமானியர்களிடம் சட்டென ஒட்டிக்கொள்ளும் 'கனெக்டிவிட்டி'.
இருவருமே 'ரிசோர்ஸ்' விஷயத்தில் சம பலத்துடன் மல்லுக்கட்டுகிறார்கள். கார்த்திக்கின் பலம் அவரது 'ஸ்ட்ரேட்டஜி' என்றால், ஆதவ் அர்ஜுனாவின் பலம் அவரது 'அவுட்ரீச்'.
அதிமுக எனும் 'வைல்ட் கார்டு'!
இந்த இரண்டு துருவங்களுக்கும் இடையே அமைதியாக களம் காண்கிறார் அதிமுக விஜயகுமார். வில்லிவாக்கத்தின் பழைய வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், அதிமுக இங்கே பலமுறை 'ஜாக்பாட்' அடித்திருக்கிறது. கடந்த 2 முறை இங்கே திமுக, அதற்கு முன் அதிமுக, இடை இடையே காங்கிரஸ் என்று இங்கே கட்சிகள் மாறி மாறி வென்று இருக்கின்றன. இந்த முறை இந்த 'வைல்ட் கார்டு' யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்பதுதான் த்ரில்லர் மூவ். அதிமுக பிரிக்கும் ஓட்டுகள் திமுக-வின் கோட்டையைத் தகர்க்குமா அல்லது தவெக-வின் உதயத்தைத் தடுக்குமா?
களம் யாருக்கு?
தனிப்பட்ட ரீதியில் பார்த்தால், கார்த்திக் மோகனின் உழைப்பிற்கு இந்த வாய்ப்பு தகுதியானது என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் செய்த பணிகள் எல்லாம் அண்ணா நகரில்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர் அண்ணா நகரில்தான் பணிகளை செய்து கொண்டு இருந்தார். அருகிலேயே உள்ள வில்லிவாக்கம் அவருக்கு கிடைத்துள்ளது. அண்ணா நகரில் அவர் விதைத்த உழைப்பு, வில்லிவாக்கத்தின் மண்ணில் அறுவடை செய்யப்படுமா?
ஸ்ட்ரேட்டஜி Vs அவுட்ரீச்... இதில் ஜெயிக்கப்போவது எது? வில்லிவாக்கம் ரிசல்ட் சென்னை அரசியலில் ஒரு புதிய ட்ரெண்டை செட் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை!












Click it and Unblock the Notifications