"சில அறிவிலிகள் பகல் கனவு காண்கிறார்கள்.. திமுக வரலாறு தெரியல”.. ஸ்டாலின் மறைமுக அட்டாக்!
சென்னை: "திமுகவின் வரலாறு தெரியாமல் சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல வெற்றி பெறலாம் என பகல் கனவு காண்கின்றனர். திமுகவை போல வெற்றி பெற திமுகவைப் போல அறிவும், உழைப்பும் தேவை. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி நடைபெறும் அறிவுத் திருவிழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அறிவுத் திருவிழாவில் "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "1969ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்த சாதனை படைத்தது திமுக. ஏதோ கட்சியை தொடங்கினோம்; அடுத்த முதல்வர் நான்தான் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சிறை வாழ்க்கைகள்.
திமுகவினர் உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. சரிபாதி மக்கள் படிப்பறிவு பெற்றிராத காலகட்டத்தில் பாமர மக்கள் மத்தியிலும் அரசியலை விதைத்தது திமுக. திமுகவை தொடங்கியவர் அண்ணா, கட்சியைக் கட்டிக் காத்தவர் கலைஞர். இவ்விழாவிற்கு அறிவுத் திருவிழா என்று துணை முதலமைச்சர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளார். இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.
திமுகவின் வரலாறு தெரியாமல் சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல வெற்றி பெறலாம் என பகல் கனவு காண்கின்றனர். திமுகவை போல வெற்றி பெற திமுகவைப் போல அறிவும், உழைப்பும் தேவை. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான். திராவிடம் வெல்லும்; அதை காலம் சொல்லும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல; காலம் தோறும் கூர்தீட்டும் கூட்டம். அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications