Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தேர்தலுக்கு ஆஃபர் கொடுக்கும் விஜய்.. பால்வாடி பையன்".. சரமாரியாக விமர்சித்த திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆட்சியில் பங்கு தருகிறோம் என தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல் சட்டமன்ற தேர்தலுக்கு ஆஃபர் கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார் தவெக தலைவ விஜய்" என விமர்சித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியக் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்மரம் கட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

Thirumavalavan vck tvk vijay

விஜய் தலைமையிலான தவெக, பல்வேறு கட்சிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீப நாட்களாக தவெகவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பேசி வருவதாக கூறப்பட்டு வருகிறது. தவெக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "35 வருடங்களாக உனக்கு அ போட சொல்லிக் கொடுத்து திருமாவளவனை விட்டுவிட்டு, அம்பேத்கர் அரசியலை சொல்லிக் கொடுத்த திருமாவளவனை விட்டுவிட்டு, ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த திருமாவளவனை விட்டுவிட்டு, திடீர் என்று சினிமாவில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருடன் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறாய்.

உன்னுடைய அனுபவமே அவருக்கு கிடையாது. அவர் இப்பொழுதுதான் பால்வாடி பையன். ஏற்கனவே உள்ள கட்சியில் பி.எச்.டி படித்து முடித்துவிட்டு உன்னை ஒரு ஆளாக்கி வைத்து இருக்கிறேன். நீ போய்.. ஒரு பால்வாடி பள்ளியில் இருக்கக்கூடிய பையன் தான் எனக்கு தலைவர் என்று சொன்னால்.. ஏற்க முடியுமா? இத்தனை வருடங்கள் நீ படித்த பி.எச்.டி படிப்பு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

நீ போய் தான் அங்கு அரசியல் கற்று தரவேண்டிய நிலை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைவரும் தலைவர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசியல் விவாதத்தில் கலந்து கொள்ளும் பல பேர் ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து போனவர்களாக இருக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜூனாவை மறைமுகமாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "தவெக கூட்டணிக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்துள்ளது. தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது. இதுதான் தற்போது நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் நிலைமை. விஜய் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், அவர் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்பக்கூடியவர். ஆனால் அவர் தேர்தலுகாக ஆஃபர் போட்டு காத்திருக்கிறார். அங்கேயும் இன்னும் ஒரு கூட்டணி அமையவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை.

அதேபோல ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாமக தற்போது மீண்டும் இணைந்ததை காட்டி மார்தட்டி கொள்கிறது அதிமுக. புதிதாக வேறு எந்த ஒரு கட்சியும் அங்கு சேரவில்லை. பாமகவிலேயே இன்னும் உட்கசி மோதல் தீர்ந்தபாடில்லை. ஆனால், பாமக எங்கள் அணிக்கு வந்துவிட்டது என்கிறது அதிமுக. அதிமுக - பாஜக தலைமையில் கூட்டணி அமைவதற்கே திண்டாட்டமான நிலை.

ஆனால் ஊடகங்கள் இவையெல்லாம் மறைத்து திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதுவும் சங் பரிவார்களின் செயல் திட்டம்தான். தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+