Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தூது விட்ட எடப்பாடி.. அழைப்பை நிராகரித்த விஜய்.. வெளியான அதிரடி ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் நிராகரித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை சேர்த்து பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TVK Again Rejects EPS s Call for Anti-DMK Parties to Join NDA Alliance

எடப்பாடி அழைப்பு

இந்நிலையில், "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி ஒன்றில், விஜய்க்கு கூட்டணி தொடர்பாக அழைப்பு விடுத்திருந்தார்.

திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக முக்கியமான பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிராகரித்த விஜய்

அதில், "மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் எங்களின் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

தவெக அருண்ராஜ் பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், "எடப்பாடி பழனிசாமி குழப்பமான மனநிலையில் உள்ளார். தங்களின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தன்னை ஒரு பெரிய தலைவர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் தவறான கருத்தை கூறி வருகிறார். அவர்களின் கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது. எங்களை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்

அண்மையில் சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டத்திலேயே விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும், அவரது தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் எனக் கூறி இருந்தார். அதிமுக தலைவர்களும் தவெக, தங்கள் கூட்டணியில் இணையக்கூடும் எனப் பேசி வந்தனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியும் அழைப்பு விடுத்திருந்தார்.

பாஜக - அதிமுக முயற்சிக்கு பின்னடைவு

இந்தச் சூழலில் தவெகவின் சமூக வலைதள பக்கத்தில், "மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் எங்களின் வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்" எனப் பதிவிடப்பட்டுள்ளது. தவெகவின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் தவெக-வை இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் பாஜக - அதிமுகவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+