Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் மீது அட்டாக்.. ஆனால் முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவும் விஜய்.. ராங்க் ப்ரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் நேற்று விஜய் பேசிய விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது. கரூர் சம்பவத்தில் தவெகவிற்கு எந்த வித துளி தொடர்புமே இல்லை என்பது போல விஜய் பேசியது சர்ச்சையாகி உள்ளது. பெரிய அசம்பாவிதம் நடந்த வருத்தம் கூட இல்லாமல் அவர் நேற்று பேசி இருந்தார்.

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு.. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் எங்களை விமர்சனம் செய்யும் விதமாக மோசமாக, அரசியல் செய்யும் விதமாக பேசி உள்ளார்.

TVK Vijay

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு- விஜய் பேச்சு

நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம். நாம் அமைதி காத்த நேரத்தில் நம்மை பற்றி அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் அதே தமிழக அரசை உச்ச நீதிமன்றம் நறுக்கு நறுக்கு என்று குட்டி உள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாக வாதம் செய்த அறிவார்த்த வழக்கறிஞர்கள் கூனிக்குறுகி நின்றார்கள். இதை நாடே பார்த்தது.

அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தது ஏன் என்று குட்டு வைத்து.. அதை கலைத்து உள்ளனர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவும் இல்லாமல்.. அரசியல் ஆட்டம் ஆடி வருகிறார். அதிகார மமதையில் ஆடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில்.. உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகளை ஸ்டாலின் எங்களுக்கு விதித்தார்.

மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டது. ஸ்டாலின் சட்டசபையில் சொன்னது எல்லாம் வடிகட்டிய பொய் என்பது தெரிந்துவிட்டது. முதல்வர் சொன்னது எதிலும் உண்மை இல்லை. இது எல்லாம் நடந்தது.. எதற்காக நடந்தது.. என்பதை மக்கள் மறக்கவில்லை.. ஸ்டாலின்தான் மறந்துவிட்டார். இந்த திமுக ஆட்சியை இழக்கும். இந்த திமுக மீண்டும் அறிவாலயத்தில் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்படும்.

2026ல் மக்கள் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பாடம் எடுப்பார்கள். கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பப்பட்டது. ஸ்டாலின் நமக்கு எதிராக வன்ம அரசியல் செய்கிறார். ஆனால் இந்த வன்ம அரசியல் செய்யும் திமுக வீட்டிற்கு செல்லும். திமுக.. மக்கள் முடிவை ஏற்கிறோம் என்று கூறி அறிக்கை வெளியிடும் நிலை ஏற்படும். மீண்டும் சொல்கிறேன்.. இந்த தேர்தலில் போட்டி இரண்டு பேருக்கு இடையில்தான். ஒன்று தவெக.. இன்னொன்று திமுக. அதில் மாற்றம் இல்லை, என்று விஜய் பேசி உள்ளார்.

விஜய் பதில் அளிக்காத கேள்விகள்

நேற்று விஜய் கரூர் பற்றி பல விஷயங்கள் பேசினாலும்.. முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். முக்கியமான சில எதிர் கேள்விகளை வசதியாக தவிர்த்துவிட்டார். கரூர் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையா? துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்று விஜய் நினைக்கிறாரா? இந்தக் கேள்விதான் தற்போது பல தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சுமார் ஏழு மணி நேரம் தாமதமாக ஏன் வந்தீர்கள் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. உச்சி வெயிலில் மக்களை நிற்க வைத்தது ஏன்? நீங்கள் பேசிக்கொண்டிருந்தபோது பலரும் மயங்கி விழுந்தனர். அப்போதும்கூட சூழ்நிலையின் தீவிரத்தை நீங்கள் உணரவில்லையா?

சம்பவ இடத்தில் பேச வேண்டாம்.. அங்கே கூட்டம் அதிகமாக உள்ளது.. 200 மீட்டர் முன்பே பேசுங்கள் என காவல்துறை வலியுறுத்தியும், அங்கேயே பேசித்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் ஏன் பிடிவாதம் செய்தீர்கள்? திடீரென பேச்சை முடித்துக்கொண்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பியதற்கான காரணம் என்ன?

ஆளுங்கட்சி தரப்பில் பலர் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, உங்கள் தரப்பில் ஊடகங்களுக்கு ஏன் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை? மேலும், பொதுமக்களுக்கு குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் ஏன் செய்து தரப்படவில்லை?

அங்கே மக்கள் பலியான நேரத்தில் ஒரு தவெக தலைவர் கூட களத்தில் நிற்கவில்லையே ஏன்? ஒரு நிர்வாகி கூட.. ஒரு உயிரை கூட ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லவில்லையே ஏன்?, என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல்.. ஆளும் அரசை மட்டும் விமர்சனம் செய்து அரசியல் பிரச்சாரம் போல அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+