மூச்சு வாங்க வாங்க பேசிய விஜய்.. 24 மணி நேரம் ஆச்சு.. கொஞ்சம் கூட கண்டுக்காத திமுக.. தரமான பிளான்!
சென்னை; கரூர் சம்பவம் தொடர்பாக நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு மீது நடிகர் விஜய் சில விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான எதிர்வினையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் கருத்துக்களை தி.மு.க. கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறதா அல்லது இதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் வலுவாக எழுந்துள்ளது.

விஜய் ஸ்டாலின் மீது அட்டாக்
நேற்று தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு.. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் எங்களை விமர்சனம் செய்யும் விதமாக மோசமாக, அரசியல் செய்யும் விதமாக பேசி உள்ளார்.
நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம். நாம் அமைதி காத்த நேரத்தில் நம்மை பற்றி அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் அதே தமிழக அரசை உச்ச நீதிமன்றம் நறுக்கு நறுக்கு என்று குட்டி உள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாக வாதம் செய்த அறிவார்த்த வழக்கறிஞர்கள் கூனிக்குறுகி நின்றார்கள். இதை நாடே பார்த்தது.
அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தது ஏன் என்று குட்டு வைத்து.. அதை கலைத்து உள்ளனர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவும் இல்லாமல்.. அரசியல் ஆட்டம் ஆடி வருகிறார். அதிகார மமதையில் ஆடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில்.. உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகளை ஸ்டாலின் எங்களுக்கு விதித்தார்.
மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டது. ஸ்டாலின் சட்டசபையில் சொன்னது எல்லாம் வடிகட்டிய பொய் என்பது தெரிந்துவிட்டது. முதல்வர் சொன்னது எதிலும் உண்மை இல்லை. இது எல்லாம் நடந்தது.. எதற்காக நடந்தது.. என்பதை மக்கள் மறக்கவில்லை.. ஸ்டாலின்தான் மறந்துவிட்டார். இந்த திமுக ஆட்சியை இழக்கும். இந்த திமுக மீண்டும் அறிவாலயத்தில் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்படும்.
2026ல் மக்கள் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பாடம் எடுப்பார்கள். கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பப்பட்டது. ஸ்டாலின் நமக்கு எதிராக வன்ம அரசியல் செய்கிறார். ஆனால் இந்த வன்ம அரசியல் செய்யும் திமுக வீட்டிற்கு செல்லும். திமுக.. மக்கள் முடிவை ஏற்கிறோம் என்று கூறி அறிக்கை வெளியிடும் நிலை ஏற்படும். மீண்டும் சொல்கிறேன்.. இந்த தேர்தலில் போட்டி இரண்டு பேருக்கு இடையில்தான். ஒன்று தவெக.. இன்னொன்று திமுக. அதில் மாற்றம் இல்லை, என்று விஜய் பேசி உள்ளார்.
ஸ்டாலின் -விஜய்
கரூர் சம்பவம் தொடர்பாக நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு மீது நடிகர் விஜய் இப்படி விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான எதிர்வினையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன அறிக்கை கூட வரவில்லை. செய்தி தொடர்பாளர்கள் கூட விஜயை விமர்சனம் செய்யவில்லை.
எந்த செய்தி தொடர்பாளரும் திமுக சார்பில் இருந்து விஜய் பற்றி பேசவில்லை. விஜய்யின் கருத்துக்களை தி.மு.க. கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறதா அல்லது இதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் வலுவாக எழுந்துள்ளது. விஜய்க்கு போதிய வாக்கு வங்கி இல்லை.. அவருக்கு தேவையில்லாமல் எதிர்ப்பு கொடுத்து.. அவருக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டாம் என்று திமுக நினைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி












Click it and Unblock the Notifications