விஜயை எடப்பாடி கூப்பிட்டாரே! இப்போ பாருங்க என்னாச்சுன்னு! பிரஸ் மீட்டில் போட்டு பொளந்த செங்கோட்டையன்
சென்னை: தவெக கொடியை பார்த்ததும் கூட்டணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று எடப்பாடி கூறினார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலே நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும்... பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன், என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார்.

செங்கோட்டையன் சந்திப்பு
இந்த நிலையில் கடந்த வாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய நெருக்கடியை கொடுத்தது.
கட்சியில் இருந்து நீக்கம்
இதையடுத்து அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
செய்தியாளர் சந்திப்பு செங்கோட்டையன்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தவெக கொடியை பார்த்ததும் கூட்டணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று கூறினார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி எதையோ நினைத்து பேசினார். அதற்கு பின் நடந்ததை பாருங்கள். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலே நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது.
இபிஎஸ் மகன், மருமகன், மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இபிஎஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது . தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. இபிஎஸ் முதலமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாக பேசினார். கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் இபிஎஸ். அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியது இல்லை. 2009ல் இவரை நீக்கினார், என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.
விஜய் தீர்மானம்
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டு செங்கோட்டையன் இப்படி பேசி உள்ளார். தவெக கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்தான் முதல்வர் வேட்பாளர் - எடப்பாடி அப்செட்
விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக எடப்பாடி தரப்பை இது பெரிய அளவில் அப்செட் ஆக்கி உள்ளது.
தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயின் முடிவு எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது.
-
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications