Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1.91 கோடி குடும்பங்களில் சர்ப்ரைஸ்? உங்க கனவ சொல்லுங்க அரசின் சூப்பர் திட்டம்.. எப்படி செயல்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தினை தமிழக அரசு இன்று துவக்கி வைத்துள்ளது.. கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் திட்டம் தான் "உங்க கனவ சொல்லுங்க" திட்டமாகும்.. அரசின் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?

"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும்.

Unga Kanava Sollunga TN Gov Scheme Benefits Tamil Nadu Government

உங்க கனவ சொல்லுங்க

இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்கள் - விவரங்கள்

இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.

தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

பிரத்யேக இணையதளம்

ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் படிவத்தில், குடும்பம் தங்களின் மூன்று முக்கிய கனவுகளை பதிவு செய்யலாம். அத்துடன், இளம் தலைமுறையினரின் கனவுகளையும் தனிப்பட்ட முறையில் கேட்டறியப்படும... அத்துடன், இளம் தலைமுறையினரின் கனவுகளும் தனிப்பட்ட முறையில் கேட்டறியப்படும்.

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின்

இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து கருத்துகளையும் உடனடியாக நிறைவேற்றுவது அல்ல என்றாலும், 2030ஆம் ஆண்டில் தமிழகம் எப்படியொரு மாநிலமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், நீண்டகால திட்டமிடலுக்காக இந்த கருத்துகள் பயன்படுத்தப்படும்

இந்த திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நாட்டிற்கு வழங்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும் என்றே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+