விஏஓ அருணாவின் காதல்.. வாயில் புல் மருந்தை ஊற்றி.. பொன்னேரி போலீசுக்கு ஓடிய கிராம நிர்வாக அதிகாரி
சென்னை: விஏஓ அருணாவின் மரணம் மிகபெரிய பரபரப்பை தந்து வருகிறது.. தன்னுடைய காதலி அருணாவை அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக சக விஏஓ போலீசில் புகார் தந்துள்ள நிலையில், அந்த புகார்களை அருணா குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.. எனவே இது தொடர்பான விசாரணயை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது
பொன்னேரி அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மகள் அருணா.. 27 வயதாகிறது.. பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார் அருணா.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சியின் போது, பொன்னேரி அடுத்த பாக்கம் கிராம வி.ஏ.ஓ. சிவபாரதியுடன் அருணாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மெல்ல மாறியது.

பொன்னேரி விஏஓ அருணா
பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அருணாவின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள காதலர்கள் முடிவெடுத்ததாக தெரிகிறது..
இந்நிலையில்தான், கடந்த 29ம் தேதி அருணா வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறி, அவரது பெற்றோர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அருணாவை சேர்த்தனர். டாக்டர்கள் எவ்வளவோ தீவிர சிகிச்சை அளித்தும்கூட அருணாநை காப்பாற்ற முடியவில்லை.. இதனால் அருணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அருணாவுடன் பணியாற்றி வந்த சக வி.ஏ.ஓ. சிவபாரதி, அருணா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
விஏஓ காதலன் புகார் மனு
அந்த புகாரில், "நானும், அருணாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். நான் முதலில் எங்கள் காதலை வீட்டில் தெரிவித்தபோது எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அருணாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் - அருணாவின் தம்பி அஜித் அருணாவின் வாட்ஸ் அப்பை அவரது போனில் இணைத்து அருணாவிற்கு தெரியாமல் கண்காணித்து வந்துள்ளார்.
அக்டோபர் 28-ந்தேதி அஜித் எங்கள் காதலை பெற்றோர் ரவி மற்றும் ஜோதி, அண்ணன் அரவிந்த் ஆகியோரிடம் தெரிவித்து ஜாதி வெறியை தூண்டி உள்ளனர். நமது வீட்டு பெண் வேறு ஜாதி பையனை காதலிக்கிறார் என்று வீட்டில் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, ஜோதி, அரவிந்த், அஜித் ஆகியோர் சேர்ந்து அருணாவை கண்டபடி திட்டி கடுமையாக தாக்கி உள்ளனர்.
போலீசாக பணியாற்றி வரும் அருணாவின் அண்ணன் அரவிந்த், அருணாவை சாகுமாறு கூறி தற்கொலைக்கு தூண்டி உள்ளார். இதுபற்றி அருணா மறுநாள் எனக்கு தெரிவித்தார். நான் 2 முறை அருணா பணிபுரியும் மாங்கோடு கிராமத்திற்கு சென்றேன். அப்போது அருணா வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்யலாம். வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்தார்.
சிம்கார்டு
அவரை சமாதானப்படுத்தி பதிவு திருமணம் செய்யலாம் என்று யோசனை கூறினேன். அதற்கு அவ்வாறு செய்தால் எனது அண்ணனும், தம்பியும் என்னையும், என் குடும்பத்தையும் ஆணவக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது சம்பந்தமாக அரவிந்த் எனக்கு செல்போனிலும், அஜித் வாட்ஸ் அப்பிலும் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் அளிக்க சென்றபோது அருணா புகார் கொடுக்க வேண்டாம்,பொறுமையாக இருக்கலாம் என்று கூறி தடுத்தார். இதனால் நான் புகார் அளிக்கவில்லை.
இதற்கிடையே ஜாதியை காரணம் காட்டி அருணாவை குடும்பத்தினர் 4 பேரும் அடித்து துன்புறுத்தி உள்ளனர்... இதனால் நான் அவருக்கு தனியாக சிம்கார்டு வாங்கி கொடுத்தேன். மேலும் தனியாக இன்ஸ்டா கிராம் கணக்கு உருவாக்கி அதில் இருவரும் பேசி வந்தோம்.
வாயில் விஷம் ஊற்றிய குடும்பம்
கடந்த 30-ந்தேதி மாலை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட அருணா," வீட்டில் உள்ள 4 பேரும் என்னை அடித்து துன்புறுத்தினர். எனக்கு கட்டாயப்படுத்தி புல் மருந்து (விஷம்) தந்துவிட்டார்கள்.. இதனால் நான் இப்போது சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
ரவி, ஜோதி, அஜித், அரவிந்த் ஆகியோர் வற்புறுத்தி வாயில் ஊற்றி விட்ட மருந்தால் நான் மயக்கம் அடைந்து விட்டேன். தற்போது தான் கண் விழித்தேன் என்று மெசேஜில் தெரிவித்து இருந்தார்.
அருணா குடும்பம் மறுப்பு
ஆனால் 1-ந்தேதி காலை அருணா இறந்து விட்டார்.. மாற்று சமூக நபரை காதலித்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து அருணாவை கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்து கொலை செய்து விட்டனர். எனவே அருணாவை கொலை செய்த அவரது ககுடும்பத்தினர் 4 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் இந்த புகார்களை அருணா குடும்பத்தினர் மறுக்கிறார்கள்.. எனவே இதையடுத்து போலீசார் அருணாவின் பெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அருணாவின் செல்போன், போன் உரையாடல்கள், வாட்ஸ்அப் செய்திகள், இன்ஸ்டாகிராம் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.. அத்துடன் அருணாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக காத்துள்ளனர்.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications