விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஒத்தி வைப்பு.. மலேசியா உள்பட 39 நாடுகளில் 9 ஆம் தேதி வெளியாகாது!
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால்
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா என ஐரோப்பிய நாடுகளில் படம் 9 ஆம் தேதி வெளியாகாது எனவும் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பாவில் வெளியிடும் ஆர் எஃப் டி ஃபிலிம்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் ”இறுதி பாய்ச்சலுக்கு முன்பு சிங்கம் கூட இரண்டு அடிகள் பின்னோக்கி வைக்கும்” என்றும் பதிவிட்டுள்ளது. இதேபோல் மலேசியாவிலும் ஜனநாயகன் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்
கேவிஎன் புரோடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து டிரெய்லரும் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
விஜய் ரசிகர்களும் அவரது கடைசிப் படம் என்பதால் கொண்டாட்டத்துக்கு தயாராகி வந்தனர். படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் தியேட்டர்களிளும் டிக்கெட் முன்பதிவானது தொடங்கப்பட்டது. இதன்படி தற்போது தமிழக தியேட்டர்களில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு நடந்து வந்தது.
ஆனால் படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தற்போது 9 ஆம் தேதி வெளியாகுமா இல்லையா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் 9 ஆம் தேதி தான் சென்னை உயர் நீதிமன்றம் ஜனநாயகன் படத்திற்கான சென்சார் வழக்கில் தீர்ப்பு அளிக்க உள்ளது.
9 ஆம் தேதி படம் வெளியாகாது
இந்த நிலையில் உள்ளூரில் வெளியாகாமால் வெளிநாடுகளில் மட்டும் ரிலீஸ் ஆனால் அது தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் தற்போது 39 நாடுகளில் விஜய்யின் ஜனநாயகன் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வரும் 9 ஆம் தேதி படம் வெளியாகாது என ஐரோப்பாவில் வெளியிடும் ஆர் எஃப் டி ஃபிலிம்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா என 39 நாடுகளில் படம் 9 ஆம் தேதி வெளியாகாது எனவும், "இறுதி பாய்ச்சலுக்கு முன்பு சிங்கம் கூட இரண்டு அடிகள் பின்னோக்கி வைக்கும்" என்றும் பதிவிட்டுள்ளது.
மலேசியாவிலும் ஒத்தி வைப்பு
இதனை தொடர்ந்து மலேசியாவிலும் விஜய்யின் ஜனநாயகன் படம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகி உள்ளது. கேவிஎன் புரொடெக்ஷன் சார்பில் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் வரும் 9 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐரோப்போ நாடுகளில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications