Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஐ விசாரணைக்கு.. தனி விமானத்தில் டெல்லி சென்று வந்த விஜய்! செலவு மட்டும் இத்தனை லட்சமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் நெரிசல் பலி வழக்கில் விசாரணைக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகியிருந்தார். டெல்லி பயணத்திற்கு விஜய் தனி விமானத்தில் சென்று வந்திருக்கிறார். இந்த பயணத்திற்கு ரூ.45-55 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான சேவையை பொறுத்தவரை, பயணிகள் விமானம் மற்றும் தனி விமானம் என்று இரண்டு வகைகள் உள்ளன. விஜய் சொந்தமாக தனி விமானத்தை வைத்திருக்கவில்லை. எனவே, தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்.

Vijay TVK

தனி விமானம்

அவர் பயணம் செய்தது 'Fly SPS' நிறுவனத்தின் Embraer Legacy 600 ரக சொகுசு ஜெட் விமானமாகும். இந்த விமானத்தில் 13-14 பேர் வரை சொகுசாக அமர்ந்து பயணிக்க முடியும். இந்த விமானம் கொஞ்சம் பெரிய சைஸ். விமானத்தின் அளவை பொறுத்துதான் அதற்கான கட்டணங்களும் மாறுபடும். இந்த விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.4-7 லட்சம் வரை செலவாகும்.

பார்க்கிங் கட்டணம்

குறிப்பாக டெல்லி, சென்னை விமான நிலையங்களில் விமானங்களை தரையிறக்கவும், கையாளவும் ரூ.1.5 - 2.5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, டெல்லியில் தங்கும் பட்சத்தில் விமானங்கள், விமான பணியாளர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு செலவு என சேர்த்து ரூ.1 லட்சம் வரை வந்துவிடும்.

ஜிஎஸ்டி வரி

இதைவிட முக்கியம், இந்த செலவுகள் அனைத்துக்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பதுதான். மொத்த செலவில் 18% ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டும். மேலும் தனி விமானங்கள், இதர பயணிகள் விமானங்களை விட தனிச்சிறப்பு வாய்ந்த எரிபொருளைதான் பயன்படுத்துகின்றன. எனவே ஒரு முறை டெல்லி சென்று வரவே சில லட்சங்கள் வரை செலவாகும். ஆக இப்படியெல்லாம் சேர்த்தால், விஜய் டெல்லி சென்று திரும்ப ரூ.45-55 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+