ஜனநாயகன் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஏன்? மனசு உடைந்த விஜய்.. உண்மையான காரணம்!
சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. படத்திற்கு தணிக்கை கிடைக்காத காரணத்தால் தற்போது வெளியீடு தள்ளிப்போய் உள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் பட வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் தயாரிப்பாளர்கள் ஒத்திவைத்ததற்குக் காரணம், ஒற்றை நீதிபதியின் தீர்ப்பு இறுதியானது அல்ல என்பதே என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். இத்தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் மேல்முறையீடு செய்ய முடியும்.

சட்டப் போராட்டங்கள் பொதுவாகவே நீண்டவை. இதனால் உடனே ஆணை பெற்று படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. ஜனவரி 13 (செவ்வாய்) முதல் ஜனவரி 18 (ஞாயிறு) வரை உயர் நீதிமன்றத்திற்குப் பொங்கல் விடுமுறை என்பதால், இந்தச் சிக்கல் மேலும் கூடும்.
மேலும், முதல் திருத்தக் குழு தணிக்கைச் சான்றிதழ் பரிந்துரைத்தாலும், CBFC தலைவர் அதை ஏற்காமல், திரைப்படத்தை இரண்டாம் திருத்தக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் கொண்டவர். இதனால் மீண்டும் படத்தை அவர் திருத்த குழுவிற்கு அனுப்பலாம். இதனால் படம் இந்த பொங்கலுக்கு வெளியாகாமல் போனால் கூட போகும் வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி எழுப்பிய ஜனநாயகன்
ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழுக்கு எதிராக CBFC சென்சார் குழுவின் ஒரு உறுப்பினர் மட்டும் எப்படி புகார் அனுப்ப முடியும் என்று படத்தின் தயாரிப்பு தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. புகார் அளித்தவர் யார் என்பது குறித்து இன்று வரை தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கோர்ட்டில் தயாரிப்பு தரப்பு வாதம் வைத்துள்ளது.
நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலகுக்கு உள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீவிர விசாரணை நடத்தது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்ஷன்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
ஜனநாயகன் தரப்பு வாதம் என்ன?
ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசன், தணிக்கைக் குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தங்கள் பரிந்துரைகளைப் பதிவு செய்ததாகவும் கூறினார். அந்தக் குழுவின் ஒரு உறுப்பினர் மட்டும் எப்படி புகார் அனுப்ப முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். புகார் அளித்தவர் யார் என்பது குறித்து இன்று வரை தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை.
உண்மையில், இந்த புகாரானது தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரால் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்று தான் தெரியவந்தது. ஒரு தனி உறுப்பினரால் எழுதப்பட்ட கடிதத்தை 'புகார்' என்றே கருத முடியாது என அவர் வாதிட்டார். "நான் ₹500 கோடி முதலீடு செய்துள்ளேன். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஜனவரி 9 அன்று படம் வெளியாகும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நான் டிசம்பர் 18 அன்றே விண்ணப்பித்து, தட்கல் நடைமுறையிலும் சென்றேன்," என்று வழக்கறிஞர் பராசன் குறிப்பிட்டார்.
தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்
சென்சார் வாரிய அதிகாரிகள் சினிமா விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஐந்து பேர் கொண்ட தணிக்கைக் குழுவில் ஒரு உறுப்பினரின் 'புகார்' மட்டும், குழுவின் U/A 16+ சான்றிதழ் வழங்கிய பரிந்துரையை ரத்து செய்ய எப்படி ஒரு காரணமாக முடியும் என்று வழக்கறிஞர் பராசன் கேள்வி எழுப்பினார். சிறுபான்மை கருத்து எப்படி பெரும்பான்மையாக மாறும் எனவும் அவர் வியப்புடன் தெரிவித்தார்.
-
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications