Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்சார் சர்ட்டிபிகேட் ஜனநாயகன் விஜய்க்கு எப்போ? தளபதி 69-ஐ வட்டமிடும் நபர்? முட்டுக்கட்டையான மதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தாமதமாவதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த பிசினஸும் சிக்கலில் உள்ளது" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்..

Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ஜனநாயகன் படத்தை டிசம்பர் 19ம் தேதியே தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு, சில காட்சிகளை நீக்க சொல்லி உள்ளார்கள்,.. சில சொல்லியும் மியூட் பண்ண சொல்லி உள்ளார்கள்..

Jana nayagan censor certificate Jananayagan

அடுத்த வாரமே அதையெல்லாம் சரிசெய்து, படத்தின் புதிய பிரதியை தயாரிப்பு நிறுவனம் தணிக்கை குழுவிடம் ஒப்படைத்தது. ஆனால், அதன் பிறகு தணிக்கைக் குழுவிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் மௌனமாக இருந்துள்ளனர்.

தணிக்கை சான்றிதழ்

ஜனவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் தியேட்டர் ஒப்பந்தங்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தணிக்கைக் குழுவின் மௌனத்தால் என்ன செய்வது என்று தெரியாமல், தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிடவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரிய அளவில் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

சென்சார் சர்ட்டிபிகேட்

நீதிபதி ஆஷா முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தபோது, சென்சார் தரப்பில், 'மத ரீதியான காட்சிகள்' குறித்து தனிப்பட்ட புகார்கள் வந்தன.. அதனால்தான் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியுள்ளதாகவும், அங்கிருந்து பதில் வந்த பிறகே சான்றிதழ் வழங்க முடியும் என்றும் தணிக்கைக் குழு பதிலளித்தது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது... மதரீதியான காட்சிகள் இருப்பதாக புகார்கள், எழுத்துப்பூர்வமாக வந்ததா அல்லது வாய்மொழியாக வந்ததா என்பது குறித்தும், அந்தப் புகாரைக் கொடுத்தவர் யார் என்பது குறித்தும் தணிக்கைக் குழு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் ..

மத ரீதியான சீன்கள்

சாதாரண நபர் ஒருவர் நினைத்தால் ஒரு படத்தின் ரிலீஸை நிறுத்திவிட முடியாது... அதேசமயம் யார் வேண்டுமானாலும் புகார் தந்துவிட முடியாது.. மத ரீதியான சில காட்சிகள் இருப்பதாக புகார் வந்துள்ளதால், யாராவது மதத் தலைவர் இந்த புகாரை தந்திருக்கலாம்,.

பொதுவாக மத ரீதியான புகார்கள் வரும்போது தணிக்கைக் குழு அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் .. ஒருவேளை நீதிமன்ற விசாரணையில் அந்த புகார்கள் ஆதாரமற்றவை என்று தெரிந்தால், நீதிபதி உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிடலாம்; இல்லையெனில் படம் தள்ளிப்போகலாம்.

படம் ஜனவரி 9ம் தேதி வரவில்லை என்றால், ஏன் 10 தேதி வெளியிடக்கூடாது? எதற்காக இவ்வளவு அவசரம்? என்று நீதிபதி ஒரு கேள்வியையும் முன்வைத்துள்ளார்..

எம்ஜிஆர் இமேஜ்

தணிக்கைக் குழு மத்திய அரசின் அதாவது பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதால், நடிகர் விஜய்யின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இது செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது... எம்.ஜி.ஆர் காலத்தில் நடந்தது போல, விஜய்யின் படத்தை முடக்க நினைத்தால் அது அவருக்கு மக்களிடையே ஒருவிதமான ஆதரவையும் பாசிட்டிவ் இமேஜையும் பெற்றுத்தந்துவிடலாம்.

தணிக்கை சான்றிதழ் தாமதமாவதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த பிசினஸும் சிக்கலில் உள்ளது..

தணிக்கை சான்றிதழ்

தணிக்கைச் சான்றிதழ் வாங்காமல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடாது.. இது சென்சார் போர்டு சட்டமாகும்,.., சர்ட்டிபிகேட் வாங்காமல் தேதியை அறிவிப்பது சட்டததை மீறியிருப்பதாகவே தெரிகிறது...மத ரீதியான புகார்கள் வந்துள்ளபோது, தணிக்கைக் குழு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.. முறையான விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க முடியும்.

படத்தின் தணிக்கை சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, கரூர் சம்பவத்திற்காக நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதும், இதற்குப் பின்னால் ஒரு அரசியல் நெருக்கடி இருக்கலாம் என்ற எண்ணமும் வலம் வருகிறது...

நடிகர் விஜய்க்கு இதுபோன்ற ரிலீஸ் நேரப் பிரச்சனைகள் புதிதல்ல.. , 'தலைவா' உள்ளிட்ட பல படங்களின் போது அவர் இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்தித்தே அரசியலுக்கு வந்துள்ளார்

படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகாவிட்டால் அது விஜய்யின் அரசியலுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அவரது ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

தணிக்கைச் சான்றிதழ் வாங்காமல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடாது.. இது சென்சார் போர்டு சட்டமாகும்,.., சர்ட்டிபிகேட் வாங்காமல் தேதியை அறிவிப்பது சட்டததை மீறியிருப்பதாகவே தெரிகிறது...மத ரீதியான புகார்கள் வந்துள்ளபோது, தணிக்கைக் குழு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.. முறையான விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க முடியும். படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகாவிட்டால் அது விஜய்யின் அரசியலுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+