சிங்கத்தின் வாயில் சிக்கிய விஜய்.. பாஜகவின் தேர்தல் டீல்.. புட்டுபுட்டு வைத்த செல்வப்பெருந்தகை
கோவை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை, ஜனநாயகன் படம் நெருக்கடி ஆகியவை மூலம் பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுத்து தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சித்து வருகிறது. அவர் சிங்கத்தின் வாயில் சிக்கிவிட்டார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி நாளை மதியம் நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகை புரியவுள்ளார். அங்கு பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் பங்கேற்கிறார். முழுக்க முழுக்க பள்ளி நிகழ்விலும், பொங்கல் விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்
இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. தவெக தலைவர் விஜய்யை விசாரணை என்கிற பெயரில் அரசியல் நெருக்கடி கொடுத்து தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்களின் அந்த முயற்சி பலிக்காது. விஜய் ஒப்பந்ததிற்கு தாயரானால் வழக்குகள் வாபஸ் வாங்கப்படும். சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட கதையாக விஜய் சிக்கி இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பார்க்க தானே போகிறோம்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேச தெரியாதவர். அவருக்கு எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று தெரியாது. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ் மண்ணில் பாசிச சக்திகளை நுழைய விடாது. கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். இந்தியா கூட்டணி அங்கம் உள்ள எல்லா ஆட்சியையும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியாக தான் பார்க்கிறோம்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
ஒவ்வொருவருக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். இதில் திமுக தலைமையும், எங்கள் தலைமையும் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு கொள்ளை புற அரசியல் செய்யும் பழக்கம் இல்லை. வெளிப்படையாக தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். கூட்டணி தொடர்பாக எங்கள் தலைமை குழு அமைத்துள்ளது. அவர்கள் தான் பேசுவார்கள். இனிமேல் கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள்" என்றார்.
-
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்











Click it and Unblock the Notifications