"வாக்குகளை திருடி பிரதமரானவர் தான் மோடி.. சீக்கிரம் அம்பலப்படுத்துவோம்.." ராகுல் காந்தி தாக்கு
டெல்லி: வாக்கு திருட்டு தொடர்பான புகார்களைக் காங்கிரஸின் ராகுல் காந்தி தொடர்ச்சியாக எழுப்பி வருகிறார். இதற்கிடையே பாஜக தொடர்ச்சியாகத் தேர்தல்களைத் திருடி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல் காந்தி, தேர்தல்களைத் திருடி பிரதமரானவர் தான் நரேந்திர மோடி என்றும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகத் தொடர்ச்சியாக மிகப் பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். முதலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரியானாவிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

ராகுல் காந்தி
இதற்கிடையே இப்போது ராகுல் காந்தி, பாஜக மீதும் பிரதமர் மோடி மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல்களை மொத்தமாகத் திருடும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாகவும், நரேந்திர மோடி தேர்தல்களைத் திருடி பிரதமர் ஆனதாகவும் விமர்சித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக எப்படித் தேர்தல்களைத் திருடுகிறது என்பதை இளைஞர்கள் மற்றும் Gen Z பிரிவினருக்குக் காங்கிரஸ் தெளிவாக விளக்கும் என்றார். "வாக்குத் திருட்டை" வெளியில் கொண்டு வந்து, மக்களிடம் அம்பலப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல்களைத் திருடி பிரதமரானவர்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எங்களிடம் நிறையத் தகவல்கள் உள்ளன. நாங்கள் இந்தச் செயல்முறையைத் தொடர்வோம்.. நரேந்திர மோடி தேர்தல்களைத் திருடி பிரதமரானார் என்பதையும், பாஜக தேர்தல்களைத் திருடுகிறது என்பதையும் இந்தியாவின் Gen Z, இளைஞர்களுக்கு நாங்கள் தெளிவாகக் காட்டுவோம். இதை நாங்கள் தெளிவாகச் சொல்வோம், எந்த சந்தேகமும் இருக்காது.
கடந்த புதன்கிழமை கூட இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கியிருந்தேன். இது ஒரு எளிய விஷயம். ஹரியானா தேர்தல் ஒரு நேர்மையான தேர்தலே இல்லை.. அங்கு மிகப் பெரியளவில் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது என்பதை விளக்கினேன்.
போலி வாக்கு
போலி வாக்குகள், போலியான புகைப்படங்கள் என நான் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.. ஆனால், பாஜகவினர் தான் வந்து பேசுகிறார்கள். இதன் மூலம் பாஜக தேர்தல் ஆணையத்தைப் பாதுகாக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால், நான் சொன்னதை அவர்களும் கூட மறுக்கவில்லை.
அங்குப் பதிவான வாக்குகளில் சுமார் 25 லட்சம் வாக்குகள் போலியானவை. பாஜக வெற்றிபெறத் தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கிறது. பிரேசில் மாடலின் போட்டோ வாக்காளர் பட்டியலில் இருந்ததும் கூட இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அப்படியானால் உண்மையில் என்ன தான் நடக்கிறது? நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரசியலமைப்பைத் தாக்குகின்றனர். ஒருவருக்கு ஒரு வாக்கு என அரசியலமைப்பு மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், ஹரியானாவில் ஒரு நபருக்குப் பல வாக்குகள் என்றே இருக்கிறது.
பீகார் தேர்தல்
இதே வேலையை அவர்கள் பீகாரில் செய்யப் போகிறார்கள்.. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இதைச் செய்திருக்கிறார்கள், ஹரியானாவிலும் இது நடந்தது. குஜராத்தில் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. எனவே இதுதான் முக்கியப் பிரச்சனை" என்றார்.
பீகார் மாநிலத்தில் நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அங்கு வரும் நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications