திருப்பரங்குன்றம் வழக்கில்.. எங்க கருத்தை கேட்காமல்.. உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் கேவியட் மனு
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை ராம ரவிக்குமார் தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது காசிவிசுவநாதர் கோவில், தீபத்தூண், சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவை உள்ளன. இதில், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், கார்த்திகை நாளில் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தீபம் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து தீபம் ஏற்றலாம் என்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் தர்ப்பில் , உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், ராம ரவிக்குமார் தரப்பு என பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், அரசின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வருகிற கார்த்திகை மாத தீப திருநாளன்று கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றச்செல்லும் குழுவினருடன் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.
தீபம் ஏற்றுவதற்கு எத்தனை பேர் செல்வது என்பதை தொல்லியல் துறையினரும், காவல்துறையினரும் சேர்ந்து முடிவு செய்யலாம். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்" என்று பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது.
கேவியட் மனு தாக்கல்
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். இல்லாத ஒன்றை புகுத்த நினைக்க கூடாது. தீபம் ஏற்ற சொல்லிய இடமானது தீபத்தூணே இல்லை. அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் எங்காவது இருக்கிறதா? ஆங்கிலேயர் காலமோ, காமராஜர் காலமோ அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் இருக்கிறதா? இப்படி இல்லாத ஒன்றை செய்ய சொல்வது எப்படி நியாயம் ஆகும் என்பது தான் மக்களின் கேள்வி என ரகுபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராம ரவிக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக்கோரி கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications