ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. நழுவிய செங்கோட்டையன்.. தவெகவில் டிவிஸ்ட்
ஈரோடு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தமுறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. வெற்றிக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பான வியூகங்களை அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக எதிர்ப்பு அரசியலை தவெக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. கூட்டணி ஆட்சி என்பதை தவெக மேடைக்கு மேடை பேசி வந்தது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், கூட்டணி குறித்தும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாடு குறித்து தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது அவர், "பெரும்பாலான தவெக தலைவர் விஜய் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடியவராக இருக்கிறார், புதிய வரலாறு படைக்கும் தலைவராக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தவெக விருப்ப மனு குறித்து விநியோகம் குறித்து தலைவர் தான் முடிவு செய்வார். திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே அரசு ஊழியர்களின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.

கூட்டணி விவகாரத்தில் டிவிஸ்ட்
இன்றுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாததால் போராட்டம் வலுத்து கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைவார்கள். கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தான் முடிவு செய்யும். அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மக்களுடன் இணைந்து கூட்டணிக்கு விரும்பும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணியில் இணைவது குறித்து தலைவர் முடிவு செய்வார்.
எங்களை பொறுத்தவரை தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி. அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் தலைவர் வழிநடத்துதல் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதைப்பற்றி இப்போது பதில் சொல்ல முடியாது.
தவெக தான் டார்கெட்
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தவெக வை தான் தாக்குகின்றன. அப்படியென்றால் எங்கள் கட்சி எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். காய்க்கிற மரத்தில் கல்லடி படுவதை போல, மக்களால் தவெக வெற்றி போகிறது என்பதை உணர்ந்துதான் இரண்டு கட்சிகளும் எங்களை தாக்குகின்றன. எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் குறைபாட்டை தாக்கவில்லை. எல்லோரும் எங்களைத்தான் தாக்குகிறார்கள்." என்றார்.
-
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக?












Click it and Unblock the Notifications