20 தமிழர் படுகொலை: போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
ஹைதராபாத்: 20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிக் கோரி மக்கள் உரிமைகள் குழு சார்பில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை தலைவர் ராமுடு 16 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் ஆந்திர வனத்துறை சட்டம் மற்றும் ஐ.பி.சி. 307வது பிரிவுகளின் கீழ் படுகொலை செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை இன்று காலை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் சிங் குப்தா, காவல்துறை தலைவரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நிராகரித்தார்.
மேலும் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் நடைபெற்றது.
அப்போது, 20 தமிழரை சுட்டுப் படுகொலை செய்த போலீசார் பெயர்களைக் குறிப்பிட்டு ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அந்த போலீசார் அனைவர் மீதும் ஆந்திரா மாநில அரசு உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கல்யான்சிங் குப்தா அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன் வரும் திங்களன்று இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை ஆந்திரா அரசு தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications