Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பவானி சிங் நியமனத்தில் தவறில்லை'' என தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி தமிழகத்தை சேர்ந்தவர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதில் தவறு இல்லை என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தமிழகத்தைச் சேர்ந்தவர்.

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக கூடாது என்று தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.

Bhavani Singh to continue in appeal in High Court: Justice Banumathi

இதில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு எதுவும் இல்லை நீதிபதி பானுமதியும், அவரது நியமனம் தவறானது என நீதிபதி மதன் லோகூரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது 3 நீதிபதிகள் கொண்ட அரசிய சாசன பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு இல்லை தீர்ப்பளித்த நீதிபதி தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரேமானந்தா சாமியார் வழக்கு, ஜல்லிக்கட்டு போன்ற பல முக்கிய வழக்குகளில் அதிரடித் தீர்ப்பு அளித்தவர் அவர்.

நீதிபதி பானுமதி, தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர். 20-7-1955 அன்று பிறந்தார். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர் 16-11-88 அன்று நேரடியாக மாவட்ட நீதிபதியானார். கோவை, சென்னை, வேலூர், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக அவர் பணியாற்றியுள்ளார்.

பானுமதி வழங்கிய அதிரடி தீர்ப்புகள்..

சர்ச்சைக்குரிய சாமியார் பிரேமானந்தா மீதான பலாத்கார வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அளித்த தீர்ப்பின் மூலம் நீதிபதி பானுமதியின் பெயர் பிரபலமானது. 2003ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார் அவர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து நீதிபதி பானுமதி முக்கிய தீர்ப்பளித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக சஸ்பென்ட் செய்து நீதிபதி பானுமதி உத்தரவிட்டிருந்தார்.

2010ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்துவது சரியே என தீர்ப்பளித்ததுடன், கோயில் நிர்வாகம் என்பது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; அரசுக்கு அதில் தலையிட உரிமை உண்டு என்ற அதிரடித் தீர்ப்பையும் அவர் கொடுத்தார்.

இதேபோல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான அதிரடிப்படையினருக்கு பணி மூப்பு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்திருந்தார். மேலும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை விதித்தவரும் நீதிபதி பானுமதிதான்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் பானுமதிதான்... தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவது குறித்த வழக்கில், அவரது நியமனத்தில் தவறில்லை என்று அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்.

நீதிபதி மதன் லோகூர்..

இதே வழக்கில் பவானிசிங் நியமனம் தவறானது என்று தீர்ப்பளித்து ஜெயலலிதா தரப்பை மிகவும் சாடியிருக்கும் மற்றொரு நீதிபதியான மதன் லோகூர் டெல்லியைச் சேர்ந்தவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் மற்றும் சட்டப்படிப்பை முடித்தவர். 1977ஆம் ஆண்டு வழக்கறிஞராக சட்டப் பணியை தொடங்கினார்.

1998ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் லோகூர். 1999ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக சில மாதங்கள் அவர் பணியாற்றினார். குவஹாத்தி மற்றும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றி லோகூர் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் நியமித்த பல்வேறு குழுக்களில் நீதிபதி மதன் லோகூர் இடம்பெற்றிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+