இன்று ‘காணாமல் போன குழந்தைகள் தினம்’... இந்தியாவிலேயே மேற்கு வங்காளம்தான் மோசம்
கொல்கத்தா: இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக குழந்தைகள் காணாமல் போவது மேற்கு வங்காள மாநிலத்தில் தான் என புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.
இந்திய அளவில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் அதிக அளவில் சிறார்கள், மைனர் பெண்கள் காணாமல் போகின்றனர். இந்தியாவில் காணாமல் போகும் சிறார்களில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக மைனர் சிறுமிகள் அதிக அளவில் இங்கு காணாமல் போகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தால் மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாக இருப்பதை உணர முடியும்.

மேற்கு வங்காளம்...
மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போன சிறார்களின் எண்ணிக்கை 14,671 ஆகும். இது நாட்டின் மொத்த காணாமல் போனோரின் எண்ணிக்கையில் 21 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

5 பேரில் ஒருவர்...
இந்தியாவில் காணாமல் போகும் 5 சிறார்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 2014ல் 13,090 சிறார்கள் காணாமல் போனார்கள். டெல்லியில் 7599, ஆந்திராவில் 7072 பேர் காணாமல் போயுள்ளனர்.

நிலைமை மாறவில்லை...
கடந்த 2010-14 காலகட்டத்தில் மேற்கு வங்காளத்தில் குழந்தைகள் காணாமல் போவது சற்று குறைந்துள்ளது. அதாவது 7.4 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் நிலைமை மோசம் என்ற நிலையிலிருந்து இன்றும் மாறவில்லை.

அதிகரிப்பு...
குழந்தைக் கடத்தலில் மேற்கு வங்காளமே நாட்டில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 608 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2010ல் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 332 ஆக இருந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 2351 ஆக அதிகரித்துள்ளது.

சிறுமிகள் அதிகம் ...
கடந்த 2010-14 காலகட்டத்தில் கடத்தப்பட்ட சிறார்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள் ஆவர். இதுதான் கவலையை அதகரிப்பதாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண பதிவகம் கூறியுள்ளது.

புள்ளி விவரம்...
2010-14 காலகட்டத்தில் நாடுமுழுவதும் 3.85 லட்சம் சிறார்கள் காணாமல் போனார்கள். இவர்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள். கடந்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் காணாமல் போன சிறார்களில் 70 சதவீதம் பேர் சிறுமிகள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. காணாமல் போவோரில் 40 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமலேயே போகின்றனர்.

கிழக்குப் பகுதியில் அதிகம்...
மேலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், ஒடிஷாவில்தான் சிறுமிகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர் என்பது இன்னொரு கவலைக்குரிய அம்சமாகும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications