18 வருடமாக இழுக்கப்பட்ட வழக்கில், மூன்றே நிமிடங்களில் தீர்ப்பு!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் சிறை தண்டனை, அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா தரப்பு செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாராசாமி அறிவித்தார்.
காலை 11 மணிக்கு சரியாக கோர்ட் ஹாலுக்குள் வந்த குமாரசாமி, 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின், முக்கிய அம்சங்களை, 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்து முடித்து கிளம்பினார்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு கோர்ட்டுகளில் 18 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 3 நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டார் குமாரசாமி.
சீனியரை தூக்கி வைத்துக் கொண்டாடிய அதிமுக வக்கீல்கள்
நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வாசித்து முடித்து விட்டுக் கிளம்பியதும், நீதிபதி குமாரசாமிக்கு அதிமுக வக்கீல்கள் பெரிய கும்பிடு போட்டு வணக்கம் செலுத்தினர். பின்னர் தங்களது சீனியர் வக்கீலை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவை வாழ்த்திக் கோஷமிட்டனர்.
கண்டித்த மற்ற சீனியர்கள் - போலீஸார்
இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த மற்ற வக்கீல்கள், குறிப்பாக பிற சீனியர் வக்கீல்கள் இதுபோல கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அதிமுக வக்கீல்களைக் கண்டித்தனர். அங்கிருந்த போலீஸாரும் கண்டித்தனர். இதையடுத்து அதிமுக வக்கீல்கள் அமைதியாக வெளியேறினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications