ஜெ. வழக்கு: நிறுவனங்களின் சொத்துக்களை ஏன் முடக்கவில்லை? பவானிசிங்கிடம் நீதிபதி சரமாரி கேள்வி!!
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்து 4 மாதங்களாகியும் 6 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்காதது ஏன் என்று நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான பவானிசிங்கே மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் ஆஜரானது எப்படி என்றும் நீதிபதி குமாரசாமி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு 18வது நாளாக இன்று கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது 6 நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும், தங்கள் நிறுவனங்களும் தொடர்பில்லை என வாதிட்டனர். நிறுவனங்களின் சொத்துகளை முடக்க உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் 6 நிறுவனங்களின் சொத்துகளை இதுவரை ஏன் முடக்கவில்லை என்று பவானிசிங்கிடம் கேள்வி எழுப்பினார்.
நால்வரின் தண்டனைக்குத்தான் தடையே தவிர நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க தடை விதிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான தாங்களே, மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் ஆஜரானது எப்படி?, என்று பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். சிவில் வழக்குகளில் ஆஜராக அரசாணை தேவையில்லை. அதேசமயம் கிரிமினல் வழக்குகளில் போதிய உத்தரவு இல்லாமல் ஆஜராக கூடாது என்றும் நீதிபதி குமாரசாமி கண்டிப்புடன் தெரிவித்தார்.
பவானிசிங் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கத்தான் தான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நிறுவனங்களின் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
17 வது நாள் விசாரணை
17-வது நாளான நேற்றைய தினம் விசாரணை தொடங்கியதும் குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் எழுந்து, ‘சொந்த ஊர் சென்றுவர வசதியாக சனிக்கிழமை விசாரணை நடத்தாமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, ‘இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தினமும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எந்த நிலையிலும் விசாரணையை ஒத்திவைக்க முடியாது' என்று அதிரடியாக கூறினார்.
வங்கிக்கணக்கு
அதைத் தொடர்ந்து, 200 பக்கங்கள் கொண்ட சென்னை மயிலாப்பூர் கனரா வங்கிமேலாளர் வித்யாசாகரின் சாட்சியத்தை, உதவி வழக்கறிஞர் மணிசங்கர் வாசித்தார். அதில், ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனி வங்கி கணக்குகளில் செய்துகொள்ளப்பட்ட பணபரிமாற்றம் குறித்து விளக்கினார். இரு கம்பெனிகளின் வங்கி கணக்கில் மட்டுமே பணிபரிமாற்றம் நடந்துள்ளதே தவிர இரு நபர்களின் சொந்த வங்கி கணக்கில் இருந்து எந்த பணபரிமாற்றமும் நடக்கவில்லை என்று விவரித்தார்.
அப்போது சசிகலா தரப்பு மூத்த வக்கீல் பசந்த்குமார், சென்னை மயிலாப்பூர்கனரா வங்கியின் மேலாளர் வித்யாசாகர் அளித்த வாக்குமூலத்தின் சாட்சியங்களைநீதிபதி குமாரசாமி முன்னிலையில் மதிய உணவு இடைவேளை வரை படித்து காட்டினார்.
பணபரிமாற்றம்
பின்னர் மூத்த வக்கீல் பசந்த்குமார் வாதிடும்போது, ‘வங்கி அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் எந்தவொரு பண பரிமாற்றமும் தனிப்பட்ட முறையில் நடைபெறவில்லை என்பதும், முறையாக தான் நடைபெற்று உள்ளது என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது. சந்தா பணம் ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஜெயலலிதாவும், சசிகலாவும் உள்ளனர். அந்த நிறுவனத்தின் மூலம் தான் பண பரிமாற்றம் நடந்து உள்ளது. மேலும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு சந்தாதாரர்கள் மூலம் தான் ரூ.14 கோடி கிடைத்தது. அந்த பணத்தை சம்பந்தப்பட்ட சந்தாதாரர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும். எனவே அந்த தொகையை கணக்கில் எடுக்கக்கூடாது' என்றார்.
சட்ட விரோத பணம்
அப்போது அரசு தரப்பு வக்கீல் பவானிசிங் குறுக்கிட்டு, நமது எம்.ஜி.ஆர்.நாளிதழுக்கு கிடைத்த ரூ.14 கோடியும் சட்டத்திற்கு புறம்பாக கிடைத்ததாககூறினார். ‘அதற்கான ஆதாரங்கள் உள்ளதா?' என்று பவானிசிங்கிடம் நீதிபதி கேட்டார். உடனே பவானிசிங், ‘அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஜெயராம் மற்றும் பதிவாளர் அளித்த வாக்குமூலத்தின் சாட்சியங்களை படித்துக்காட்டுகிறேன்' என்றார். அவசியமில்லைஉடனே ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் எழுந்து, ‘ஜெயராம் மற்றும் பதிவாளர் அளித்த வாக்குமூலத்தை படித்து காட்ட வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார்.
உடனே நீதிபதி, ‘சாட்சியங்கள் சட்டப்படி, அவர்களது தரப்புக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை, ஜெயாபப்ளிகேஷன்நிறுவனத்தின் கீழ் இயங்கி வருவதால், அந்த பத்திரிக்கை வங்கி கணக்கு மற்றும் ஜெ.பி வங்கி கணக்கில் இருந்து பணிபரிமாற்றம் நடந்துள்ளது என்று விளக்கினார்.
பிப்.2க்கு ஒத்திவைப்பு
காலை தொடங்கி மாலை வரை வங்கி மேலாளர் வித்யாசாகரின் சாட்சியம் மட்டுமேபடித்து காட்டப்பட்டது. விசாரணை முடியும் போது வழக்கில் ஏற்கனவே சாட்சியம்அளித்துள்ள பதிவாளர் லட்சுமிநாராயண் மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர்ஜெயராமன் ஆகியோர் கொடுத்துள்ள சாட்சியத்தை அரசு வக்கீல் பவானிசிங் மற்றும் சசிகலா வக்கீல் பசந்த்குமார் ஆகியோர் வீட்டில் முழுமையாக படித்து கொண்டுவந்து பிப்ரவரி 2ஆம் தேதி சுருக்கமாக வாதம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications