Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் வழக்கு விசாரணை ஏப்.7க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடர்ந்து ஆஜராகி வருவதை ரத்து செய்யக் கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு கர்நாடக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு மூத்த வழக்கறிஞரை நியமிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

SC adjourns hearing Anbazhagan's petition to Ap. 7

இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி மதன் லோகுர், பானுமதி தலைமையிலான பெஞ்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின்போது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்பட்டார்; வழக்கு விசாரணையை இழுத்தடிக்க முயற்சி செய்தார்; சிறப்பு நீதிமன்றம் பவானிசிங்குக்கு அபராதமும் விதித்தது. இதனால் மேல் முறையீட்டு வழக்கிலிருந்து அவரை நீக்க வேண்டும். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று அன்பழகன் தரப்பில் வாதிடப்பட்டது.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ராவ், சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமனம் செய்யவில்லை என்றார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன், கர்நாடகா அரசு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்காதது கர்நாடகாவின் தவறு; பவானிசிங்தான் ஜெயலலிதா வழக்குக்காக நியமிக்கப்பட்டவர் என்று வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இருதரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+