ஜெ. சொத்துக் குவிப்புவழக்கு... அன்பழகன் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைக்கவேண்டும் என்ற அன்பழகன் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அதேசமயம் மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 18-க்குள் விளக்கமளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், கர்நாடக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தி வருகின்றனர். மேல்முறையீட்டு வழக்கில் உதவி செய்ய முன்வந்த திமுக-வின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீடு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அன்பழகன் மனு தள்ளுபடி
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், கோயல் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக்கோரும் மனு மீதான உத்தரவு வரும் வரையில், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வழங்க தடை விதிக்க வேண்டும் என்ற திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அதேநேரத்தில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து மார்ச் 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி கர்நாடகா அரசுக்கும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நான்கு பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications