ஜாமீன் கிடைக்குமா? இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார் டிடிவி தினகரன்!
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள டிடிவி தினகரன் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள டிடிவி தினகரன் இன்னும் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படவுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த சனிக்கிழமை முதல் நான்கு நாட்களாக 37 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

ஒரே அறையில் விசாரணை
அப்போது சுகேஷும், டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் தெரியாது என கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே அறையில் இருவரிடமும் நேருக்கு நேராக விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
இதைத்தொடர்ந்து நள்ளிரவு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரனை கைது செய்தனர். டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஜாமீன் கோர முடிவு
இன்று பிற்பகம் 2 மணி அளவில் தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் அந்த சமயத்தில் தினகரனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
ஆனால் தினகரன் செல்வாக்கு உடையவர் என்பதால் அவர் சாட்சிகளை கலைக்க என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் டிடிவி தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications