For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியே.. தன்னந்தனியே... உலகைச் சுற்றிப் பறக்கும் ஆப்கன் பெண் விமானி!

விமானத்தின் மூலம் உலகையே தன்னந்தனியாகச் சுற்றி சாதனைப் படைக்கிறார் ஆப்கானிஸ்தான் பெண் விமானி ஷயஸ்தா வயஷ்.

By Devarajan
Google Oneindia Tamil News

காபுல்: விமானம் மூலம் உலகையே தன்னந்தனியாகச் சுற்றி சாதனை படைக்கும் ஆப்கன் பெண் விமானி விமானி ஷயஸ்தா வயஷ். இவர் தனது பயணத்தை வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முடிக்கிறார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் விமானி ஷயஸ்தா வயஷ். இருபத்தொன்பது வயதான இவர், உலகம் முழுவதும் விமானத்தில் தனியாகச் சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Afghanistan Woman Seeks To Become Youngest To Make Solo Round The World Flight

இவர் 25,800 கி.மீ. பறந்து சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். தனியாக தனது பயணத்தை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டேடோனா கடற்கரை விமான நிலையத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி தொடங்கினார். அங்கிருந்து ஸ்பெயின், எகிப்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இவர் தனது பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் முடிக்கிறார்.

இதன் மூலம் உலக நாடுகளை விமானத்தில் தனியாக சுற்றிய இளம் பெண் என்ற பெருமையை பெறுகிறார். இவர் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் பிறந்தவர். பின்னர் 1987-ம் ஆண்டில் இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அங்கு விமானம் ஓட்ட பயிற்சி பெற்று ஆப்கானிஸ்தானின் பெண் விமானியானார்.

English summary
An Afghan woman pilot hoping to become the youngest woman in history to complete a solo round-the-world flight was preparing Monday to start the Transatlantic leg of her great journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X