நிஜமான 'டைம் மெஷின்' நாடு? உலகமே 2026-ல்.. ஆனால் இந்த நாடு மட்டும் 2018-ல்..! வினோதத்தின் உச்சம்!
அடிஸ் அபாபா: இப்போது ஒட்டுமொத்த உலகமும் 2026-ஐ வரவேற்று இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு நாடு மட்டும் இன்னும் 2018லேயே உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அந்த ஒரு நாடு மட்டும் ஏன் 8 ஆண்டுகள் பின்னால் இருக்கிறது.. இதற்கு என்ன காரணம்.. அங்குப் பின்பற்றப்படும் காலண்டர் முறை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
ஒட்டுமொத்த உலகமும் இப்போது 2026ம் ஆண்டில் இருக்கிறது. கடந்த வாரம் கிருபாட்டி தீவு முதலில் புத்தாண்டை வரவேற்ற நிலையில், அதன் பிறகு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என உலக நாடுகள் வரிசையாக 2026ஐ வரவேற்றது. ஆனால், இன்னும் ஒரு நாடு மட்டும் 2018லேயே இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.. அதுதான் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா!

2018 தான் ஆகிறது
உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே சர்வதேச கிரிகோரியன் காலெண்டரை பயன்படுத்தும் நிலையில், எத்தியோப்பியாவில் மட்டும் கிரிகோரியன் நாட்காட்டிக்குப் பதிலாக, கெயஸ் (Geʽez) என்ற தனித்துவமான காலண்டர் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாகவே அங்கு மட்டும் இப்போது 2018 தான் ஆகிறது.
நூற்றாண்டுகள் பழமையான கெயஸ் காலெண்டர் என்பது, ஒரு சூரிய நாட்காட்டியாகும். இது உலகளவில் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. இந்த கெயஸ் காலெண்டர் பண்டைய எகிப்திய காப்டிக் நாட்காட்டியில் இருந்து தோன்றியதாகும்..
பெயஸ் நாட்காட்டி
நமது வழக்கமான காலண்டரில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். கிரகோரியன் நாட்காட்டியில் 12 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த பெயஸ் காலெண்டரில் 13 மாதங்கள் உண்டு.. அதில் 12 மாதங்கள் தலா 30 நாட்களையும், பாக்கும் (Pagume) எனப்படும் 13வது மாதம் 5 நாட்களையும் (லீப் வருடங்களில் 6 நாட்கள்) கொண்டிருக்கும்.
எப்படி இருக்கும்
மேலும், எத்தியோப்பியாவின் புத்தாண்டு ஜனவரியில் இல்லாமல் செப்டம்பரில் தொடங்குகிறது. இதனால், செப்டம்பர் 2025ஆம் ஆண்டிலேயே எத்தியோப்பியா 2018ஆம் ஆண்டுக்குள் நுழைந்தது. உலகம் 2026க்கு மாறியபோது, எத்தியோப்பியா தனது 2018ஆம் ஆண்டின் 4வது மாதத்தில் இருந்தது.. இது வெறுமன பேச்சுக்கு இருக்கும் காலண்டர் இல்லை. அங்கு நீதிமன்றங்கள், பள்ளிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அன்றாட ஆவணங்களில் என அனைத்திலும் அதிகாரப்பூர்வமாக இந்த தேதிகளே பயன்படுத்தப்படுகிறது.
என்ன காரணம்!
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஆண்டு என்ன என்பதை வைத்துக் கணக்கிடப்படும் முறையின் காரணமாகவே இந்த 7-8 ஆண்டு இடைவெளி உருவாகிறது. 1582ல் ஐரோப்பிய நாடுகள் கிரிகோரியன் நாட்காட்டியை முறைப்படுத்தியபோது, துறவி டியோனிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) கணக்கீடுகளின்படி, கிறிஸ்துவின் பிறப்பு 'ஆண்டு 1' என குறிக்கப்பட்டது. எத்தியோப்பியன் மற்றும் காப்டிக் தேவாலயங்கள் பழைய அலெக்ஸாண்ட்ரிய கிறிஸ்தவக் கணக்கீடுகளைப் பின்பற்றி, கிறிஸ்து பிறப்பைச் சில ஆண்டுகளுக்குப் பிந்தையதாக கணித்துள்ளன. இதுவே இந்த 7 முதல் 8 ஆண்டுகள் வரையிலான இடைவெளிக்குக் காரணமாக இருக்கிறது.
எத்தியோப்பிய பின்பற்றும் இந்த கெயஸ் நாட்காட்டியின் மாதங்கள் மெஸ்கரெம் (செப்டம்பர் 11-அக்டோபர் 10) முதல், டிகிம்ட், ஹிடார், தஹ்ஸாஸ் எனத் தொடங்கி, ஹாம்லே மற்றும் நெஹாஸ் வரை நீளுகின்றன. அதில் முதல் 12 மாதங்கள் 30 நாட்களைக் கொண்டதாக இருக்கும். 13வது மாதம் 5 நாட்கள் மட்டுமே இருக்கும். லீப் ஆண்டுகளில் இந்த 13வது மாதத்திற்கு 6 நாட்கள் இருக்கும்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications