Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணமாம் கல்யாணம்... தன்னைத் தானே மணந்த அமெரிக்கப் பெண்! தனியே ஹனிமூனுக்கும் போகிறார்!!

Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கலக்கியுள்ளார்.

ஆணைப் பெண் கல்யாணம் செய்வது, பெண்ணை ஆண் கல்யாணம் செய்வது, பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் கல்யாணம் செய்வது எல்லாம் பழைய பேஷன். அதை முறியடித்து தன்னைத் தானே திருமணம் செய்து அசத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்.

தான் 40 வயதைத் தொடுவதற்குள் தனக்கேற்ற ஜோடியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், தன்னைத் தானே மணந்து கொள்வதாக இவர் ஏற்கனவே சவால் விட்டிருந்தார். அதன்படி இவரது 40வது பிறந்த நாள் வந்தபோது தன்னைத் தானே மணந்து கொண்டுள்ளார்.

நூதனத் திருமணம்...

நூதனத் திருமணம்...

ஹூஸ்டனில் இந்த நூதனத் திருமணம் நடந்தது. சும்மா இல்லை பெரும் பொருட் செலவில் இந்தத் திருமணத்தை நடத்தினார் யாஸ்மின் எலிபே என்ற அந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்.

உற்றார், உறவினர்கள் சூழ...

உற்றார், உறவினர்கள் சூழ...

ஜனவரி 3ம் தேதி ஹூஸ்டன் ஆப்பிரிக்க அமெரிக்க கலாச்சார அருங்காட்சியகத்தில் இந்தத் திருமணத்தை நடத்தினார் எலிபே. இதில் 10 மணப்பெண் தோழிகள், குடும்ப உறுப்பினர்கள், சில விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் முன்னிலையில்...

அமைச்சர் முன்னிலையில்...

இந்த நிகழ்ச்சியில் திருமணச் சடங்குகளை எலிபேயின் சகோதரி நடத்தினார். இவர் உள்ளூர் அமைச்சரும் கூட. இது சட்டப்படியான திருமணம் இல்லை என்பதால் தனது சகோதரியையே திருமணத்தை நடத்த கேட்டுக் கொண்டார் எலிபே.

ஹனீமூனும் உண்டு...

ஹனீமூனும் உண்டு...

திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனுக்கும் திட்டமிட்டுள்ளார் எலிபே. கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு தேனிலவுப் பயணம் மேற்கொள்ளவுள்ளாராம். அதேபோல துபாயில் உள்ள ஜாஸ் திருவிழாவுக்கும் போகப் போகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+