ஈரான் விஷயத்தில் வாயை விட்ட டிரம்ப்! என்ன சொன்னாருன்னு பாருங்க.. மதுரோ நிலைமைதான் கமேனிக்கும்?
தெஹ்ரான்: சமீபத்தில் வெனிசுலாவில் நடந்த கலவரங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல ஈரான் விஷயத்திலும் தலையிட அடி போட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதாவது ஈரானில் நடக்கும் போரட்டங்களுக்கு உதவ முன்வருவதாக தெரிவித்திருக்கிறார்.
ஈரானில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் சுப்ரீம் லீடர் அயதுல்லா கமேனிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், அந்நாட்டு மக்கள் சுதந்திரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் பெற போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் சொன்னது என்ன?
ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, "ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்குகிறது. மக்களின் இந்த போராட்டத்திற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது" என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே அமெரிக்காவுக்கும்-ஈரானுக்கும் இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கிறது. ஈரானில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், பழமைவாதிகள் பிடியில் நாடு சிக்கியிருக்கிறது என்றும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
மட்டுமல்லாது ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். எனவே ஈரான் தனிமைப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் டிரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவின் கருத்து
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, "அமெரிக்கா ஈரானின் துணிச்சலான மக்களுக்கு ஆதரவளிக்கிறது" இதை மேற்கோள் காட்டி, "ரூபியோ நன்றாகச் சொன்னீர்கள். ஒபாமா நிர்வாகத்தைப் போல இம்முறை ஈரான் ஆயத்துல்லாவுக்கும் அவரது மதவாத நாஜி அடியாட்களுக்கும் எதிராக அமெரிக்கா உறுதியாக நிற்கும். மேலும், சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று டிரம்ப் கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். இந்த பதிவை டிரம்ப் ஷேர் செய்திருக்கிறார்.
அமெரிக்கா தலையிடும்
முன்னதாக, "ஈரான் பெரிய சிக்கலில் உள்ளது. மக்கள் சில நகரங்களைக் கையகப்படுத்தி வருவது போல் தெரிகிறது. நாங்கள் நிலைமையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். கடந்த காலங்களில் செய்தது போல் மக்களைக் கொல்லத் தொடங்கினால், நாங்கள் தலையிடுவோம் என்று நான் மிக உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நிச்சயம், ஈரான் விஷயத்தில் அமெரிக்கா தலையிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் உடனான உரசலின்போது, ஈரானின் அணு மையத்தை அமெரிக்கா நேரடியாக தாக்கி அழித்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தகது.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications