Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBI ஆபீஸ் கிளம்பும் விஜய்.. சைடு கேப்பில் டெல்லியில் "பெரிய" தலைகளை சந்திக்க முடிவு.. சீக்ரெட்?

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பில், நடிகர் விஜய்க்கு சிபிஐ தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 12 அன்று, அதாவது நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை அவர் ஆஜராக டெல்லி செல்ல உள்ளார்.

இந்த பயணத்தில் அவர் டெல்லியில் சில காங்கிரஸ் தலைகளை ரகசியமாக சந்திக்க திட்டமிட்டுள்ளாராம். காங்கிரஸ் தலைகளை சந்தித்து அவர்களை கூட்டணிக்கு அழைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

TVK Vijay

கரூர் வழக்கு - விஜய் விசாரணை

இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். அவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது."

விஜய் டெல்லி பொங்கல்

"ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை.

கரூர் வழக்கு தொடர்பாக நடிகர் விஜய்க்கு பொங்கல் பண்டிகைக் காலத்தில் சரியாக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் விஜய் பொங்கலை டெல்லியில் கொண்டாடினாலும் அதிசயம் இல்லை என்கிறார்கள்.

காங்கிரஸ் தலைகள்

ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கும் தவெக தலைவர் விஜய்க்கும் தீவிரமாக ஆதரவு அளித்து காங்கிரஸ் நிலைப்பாடு எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு திமுக தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாம். அதோடு டெல்லியில் ராகுல் காந்தி தரப்பிடம் புகார் அளிக்கவும் திமுக தரப்பு திட்டமிட்டு உள்ளதாம்.

ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்திலும் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. திரையுலகமே பெரிதாக விஜயை ஆதரிக்காத நிலையில்.. காங்கிரஸ் இதில் விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் சிபிஐ சம்மனுக்கு ஆஜரான பின், தனது பயணத்தில் அவர் டெல்லியில் சில காங்கிரஸ் தலைகளை ரகசியமாக சந்திக்க திட்டமிட்டுள்ளாராம். காங்கிரஸ் தலைகளை சந்தித்து அவர்களை கூட்டணிக்கு அழைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பைஜூ உடன் மீட்டிங்

கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை இவர் ஆஜராக உள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக ராகுலின் ரைட் ஹேண்ட் ஒருவர் களமிறங்க உள்ளாராம்.

ராகுலின் ரைட் ஹேண்ட் என்று அழைக்கப்படும் முன்னாள் எஸ்பிஜி அதிகாரி ஒருவர்தான் விஜய்க்கு அறிவுரை வழங்க உள்ளாராம். அது வெறும் யாரும் இல்லை கேபி பைஜூ என்ற ராகுலுக்கு நெருக்கமான நிர்வாகி. சிபிஐ விசாரணையில் என்ன பேச வேண்டும்? என்ன ஆதாரங்களை கொடுக்க வேண்டும்? என்று முக்கியமான ஆலோசனைகளை வழங்க உள்ளாராம். கேபி பைஜூ ராகுலுக்கு மிக நெருக்கம். அவர் இப்போது விஜயுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆதாரங்களை விசாரணையில் சமர்ப்பிக்க தவெக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உதவிகளை அந்த ரைட் ஹேண்ட் செய்வார் என்று கூறப்படுகிறது. ராகுலுக்கு தெரிந்தேதான் விஜய்க்கு ஆதரவாக இவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+