கூடலூர் தோட்டத்து இந்திராணிக்கு சூப்பர் சர்ப்ரைஸ் தந்த முர்மு! நீலகிரி பெண்ணுக்கு தபாலில் வந்த பரிசு
நீலகிரி: நீலகிரி கூடலூரில் இந்திராணியின் வாழ்வில் மறக்க முடியாத தருணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.. டெல்லியில் இருந்து வந்த அழைப்பை பார்த்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.. இந்த செய்திதான் நீலகிரி முழுக்க பரவி வியப்பை கூட்டி வருகிறது.. இந்திராணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்தபடி உள்ளன.
ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், நாட்டின் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் சாதாரண மக்களுக்கும் அழைப்பு வழங்கப்படுகிறது.

யாரிந்த இந்திராணி?
அந்த வகையில்தான் கூடலூரை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு கிடைத்த இந்த அழைப்பு, பலரையும் நெகிழ வைத்துள்ளது. இதனால் அனைவருமே இந்திராணிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்..
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட நந்தட்டி அருகேயுள்ள மில்லிகுன்னு கிராமத்தில் வசிப்பவர்தான் இந்திராணி... இவருக்கு வயது 56 வயதாகிறது..
கூலித் தொழிலாளியான இவரது கணவர் ராஜேந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்... 3 மகள்கள், ஒரு மகன் என நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் இந்திராணி. தனியார் தேயிலைத் தோட்டங்களில் தினக் கூலியாக பசுந்தேயிலை பறிப்பதே இவரது அன்றாட வேலையாகும்..
இப்போது, 77-வது குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பிய அழைப்பு, தேயிலை பறித்துக் கொண்டிருந்த இந்திராணியிடம் நேரில் வந்து சேர்ந்தது...
தேயிலை தோட்டத்தில் இந்திராணி
கூடலூர் உட்கோட்ட தபால் நிலைய ஆய்வாளர் ராமஜெயனேலு தலைமையிலான அலுவலர்கள், முதலில் இந்திராணிக்கு வீட்டுக்கு இந்த கடிதத்துடன் சென்றுள்ளார்கள்.. ஆனால் இந்திராணி வீட்டில் இல்லாததால், தேயிலைத் தோட்டத்துக்கே சென்று முர்மு தந்த கடிதத்தை வழங்கினார்கள்..
கடிதத்தை வாங்கி, அதனைப் பிரித்து படித்த இந்திராணி, திடீரென வந்த அழைப்பால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். கடைக்கோடி கிராமத்தில் வாழும் தேயிலைத் தோட்ட கூலி தொழிலாளியான தனக்கு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும் ஆச்சரியமாக இருப்பதாக கூறுகிறார் இந்திராணி.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்
இதுகுறித்து இந்திராணி மேலும் சொல்லும்போது, கூடலூர் சளிவயல் கிராமத்தில் நெல்லிகுண்ணு பகுதியில் வசித்து வருகிறேன்.. நான் ஒரு சாதாரண தேயிலை தோட்டத்து தினக்கூலி தொழிலாளி.. பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு கட்டி தந்திருந்தனர்.. அதுதொடர்பாக கடந்த மாதம் அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்திருந்தனர்..
நான் எந்த பெரிய சாதனையும் செய்யாத போதிலும், இப்படியொரு அழைப்பு கிடைத்திருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது" என்று பூரித்து சொல்கிறார்..
தேயிலைத் தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் இந்திராணியின் கதையை கேட்ட சக தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. அதைவிட தபால் துறையினர் நேரிலேயே வந்து அழைப்பு வழங்கியது, கூடலூர் பகுதியையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.. இந்திராணிக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அப்பகுதி மக்கள் பார்க்கிறார்கள்.
உழைப்புக்கு அரசு மரியாதை
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அனைவருக்குமே கிடைத்துவிடுவதில்லை,.. ஆனால், சாதாரண உழைப்பாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும் என்பதும், உழைப்புக்கான மரியாதையை அரசு கொடுத்து வருகிறது என்பதும் இந்நிகழ்வு மூலம் நமக்கு தெரியவருகிறது..
இந்த டெல்லி பயணத்தில் ராஷ்டிரபதி பவனில் விருந்து, நாட்டின் தலைவர்களை நேரில் பார்க்கும் அனுபவம், இந்திராணியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக நிலைத்திருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை...
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications