எல்லை தாண்டி மீன் பிடித்தால் 2 கோடி அபராதமாம்.. அதிகபட்சம் 20 கோடி.. இலங்கையின் கோமாளித்தன சட்டம்
எல்லை தாண்டி மீன்பிடித்தால் குறைந்தபட்சம் 2 கோடி அபராதம். அதிகபட்சம் 20 கோடியாம். இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர உள்ளது.
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை பிடித்து 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வழி வகை செய்யும் சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அடிக்கடி கைது செய்யப்படுவது இலங்கை கடற்படைக்கு வாடிக்கை. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழக மீனவர்களின் சுமார் 150 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் கிடக்கின்றன. இப்படி அடுக்கடுக்காய் தமிழக மீனவர்கள் இலங்கையால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

புதிய சட்டம்
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

20 கோடி அபராதம்
இந்த புதிய சட்டத்தில், எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 6ல் மசோதா அறிமுகம்
இதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 6ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் இப்புதியச் சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் அச்சம்
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு ராமேஸ்வர மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications