திருப்பூரில் 8 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேதுபதி. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 8 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். இதனை அக்குழந்தை தனது பள்ளி அசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலமாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

விசாரணையில், தந்தை குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. அதனை தாய் இந்திரா வேடிக்கை பார்த்தது தெரியவந்தது. இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, தந்தை ராஜ சேதுபதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்த தாய் இந்திராவுக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்காக 6 மாத தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications