நடிகர் கவுண்டமணிக்கு இன்று பிறந்தநாள்... அவரது முதல் படம் 16 வயதினிலே அல்ல...
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் கவுண்டமணியை பற்றிய ஒரு நல்ல தகவல் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
சென்னை: இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுப்பிரமணி கருப்பையா என்கிற கவுண்டமணியின் முதல் படம் 16 வயதினிலே அல்ல என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் கவுண்டமணி என்றாலே அவரது பாடி லாங்க்வேஜை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்துவிடும். அந்த காலங்களில் படத்தின் கதை நன்றாக வில்லை என்றாலும் கவுண்டமணி, செந்தில் இணைந்து செய்யும் காமெடிக்காகவே பெரும்பாலான படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடின.

இதுவரை 450 படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி செய்துள்ளார். இவருக்கு நடிகர் கார்த்திக்கும், சத்யராஜும் நல்ல மெமிஸ்ட்ரி ஓர்க்அவுட் ஆகும். 78-ஆவது பிறந்தநாளை இன்று கவுண்டமணி கொண்டாடினார்.
கோவை மாவட்டம், வல்லகொண்டாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கருப்பையா என்பவர் தான் இந்த கவுண்டமணி. படப்பிடிப்புகளில் சாமர்த்தியமாக கவுன்ட்டர் கொடுத்ததால் கவுன்ட்டர் மணி என்ற பெயரானது. ஆனால் காலப்போக்கில் அதுவே கவுண்டமணி என்றாகிவிட்டது.
இவரும் செந்திலும் நடித்த வாழைப்பழ காமெடி, சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய "அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா" என்ற சொல்லும் மிகவும் பரவலாக
தற்போது கூட பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் லாரல்-ஹார்டி என இவர்கள் அன்போடு அழைக்கப்பட்டனர்.
16 வயதினிலே படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர் அதற்கு முன்பு 1964-இல் சர்வர் சுந்தரம் படத்திலும், 1970-இல் ராமன் எத்தனை ராமனடி, 1971-இல் வெளியான தேனும் பாலும் ஆகிய படங்களில் டிரைவர் வேடங்களில் நடித்துள்ளார். இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதுவரை 16 வயதினிலே படம்தான் கவுண்டரின் முதல் படம் என்று நினைத்திருந்தவர்களுக்கு இன்று ஒரு புது தகவல் கிடைத்துள்ளது. எது எப்படியோ கவுண்டமணிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications