செருப்பில் காந்தியடிகள் படம்... அடங்காத அமேசான்!
அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் காலணிகளில் காந்தியடிகளின் படத்தை போட்டு இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை: அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைன் வணிகம் செய்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் தனது வெப்சைட்டில் வீட்டு வாசலில் போடப்படும் மிதியடி பற்றிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்திய தேசிய கொடி போல இருந்த அந்த மிதியடிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அமேசான் நிறுவன அதிகாரிகள் விசா திரும்பப் பெறப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்த பிறகே அமேசான் நிறுவனம் பணிந்தது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய சட்டத்துக்கு கட்டுப்படுவதாகவும், இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்" கூறி இருந்தது.
இந்த சம்பவம் நடந்த ஓரிரு நடந்த ஓரிரு நாட்களிலேயே அமேசான் நிறுவனம் மகாத்மா காந்தியின் படம் வறையப்பட்ட படத்தை தனது வெப்சைட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதன் விலை 1190 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருவது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications