''அம்மா கணக்கு'' படத்தின் தயாரிப்பாளர் 'குமாரசாமி'.. மனுஷ்யபுத்திரன் கிண்டல்
சென்னை: 'அம்மா கணக்கு' என்ற பெயரில் உருவாகி உள்ள படத்தின் தயாரிப்பாளர் யார்? என்று வார இதழ் ஒன்று கேட்ட கேள்விக்கு, குமாரசாமி என்று பதிலளித்துள்ளார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.
'அம்மா கணக்கு' என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. இதன் தயாரிப்பாளர் நடிகர், தனுஷ் ஆகும்.
ஆனந்த விகடன் முக்கிய புள்ளிகளின் பொது அறிவு, சினிமா அறிவை சோதிக்கும் விதமாக, சில பிரமுகர்களிடம், அப்படத்தின் தயாரிப்பாளர் பெயரை கேட்டது. இதற்கு முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த பதிலில் `எப்போது இருந்து காந்தி கணக்குக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? தயாரிப்பாளர் யாராக இருப்பினும் பட வெளியீட்டுக்கு தியேட்டர் கிடைப்பதற்குக் கஷ்டப்படுவார். அது மட்டும் அல்ல, அது தமிழ்ப் பெயராக இருப்பினும் வரிச் சலுகைக்கு வழி இருக்காது என்று கூறியுள்ளார்

டிவி தொகுப்பாளினி, லட்சுமி ராமகிருஷ்ணன்: `அடப்பாவீங்களா, என்னைச் சிக்க வைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்க போல. எங்க அம்மாவோட கணக்கே எனக்குத் தெரியாது. இதுல `அம்மா கணக்கு' தயாரிப்பாளரைப் பற்றி என்ன சொல்றது? சரி, ஒரு யூகத்துல பதில் சொல்றேன். உதயநிதி ஸ்டாலின், என்று கூறியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி சற்று பயந்தவராக, நீங்க ஏன் இந்த சீஸன்ல இந்தக் கேள்வி கேட்கிறீங்கனு தெரியும். உங்க வலையில் சிக்காமல் பதில் சொல்லிடுறேன். `அம்மா கணக்கு' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்தப் படத்துல அமலா பால், ரேவதி எல்லாம் நடிச்சிருக்காங்க என்றுள்ளார்.
ஆனால், மனுஷ்ய புத்திரனிடம் இதே கேள்வியை கேட்டபோது, `குமாரசாமி' என்று பதில் சொல்லியுள்ளார். அவர் எந்த கணக்கில், குமாரசாமி என்ற பெயரை சொன்னாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications