கர்நாடகாவின் மேகதாதுவை நோக்கி செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் கைது!
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவததைத் தடுக்கும் வகையில் முற்றுகையிடச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுக்க மேகதாதுவில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று காவிரி உரிமை மீட்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் நேற்று இரவு முதலே எல்லையான தேன்கனிக்கோட்டையில் குவிந்தனர்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் மேகதாது நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது விவசாயிகளின் திட்டம். ஆனால் இப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இத் தடையை மீறினால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் பகல் 1 மணியளவில் மேகதாதுவை முற்றுகையிட புறப்பட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் வந்திருந்த சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மறுமலர்ச்சி தி.மு.க., தமிழ்த் தேசியப் பேரியக்கம், விவசாய சங்கங்கள் என பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications