அரசியல் ஆதாயத்துக்காகவே கருணாநிதி வைரவிழாவை கொண்டாடும் திமுக: பொன்னார் பாய்ச்சல்
புதுச்சேரி: அரசியல் ஆதாயத்துக்காகவே கருணாநிதி வைரவிழாவை திமுக கொண்டாடுவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த அஞ்சல் துறைக் கட்டடத்திறப்பு விழாவில், கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். உடன் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், எம்.பிக்கள் ராதாகிருஷ்ணன், கோகுலக்கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து புதுச்சேரியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை பயன்படுத்திக் கொள்ள திமுக பாசாங்கு செய்து வருகிறது. அது பலிக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

பட்டியல் கொடுங்க...
கடந்த 50 ஆண்டுகளாக திமுக செய்த வளர்ச்சி பணிகளை பட்டியலிடட்டும். பார்க்கலாம். அதன் பின்னர் பாஜக குறித்து திமுக குறை சொல்லட்டும். கருணாநிதியின் வைரவிழா அரசியல் ஆதாயத்துக்காக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களை பொதுமக்கள் சந்தித்து குறைகளை கூறக் கூடாது என்பது சட்டம் ஒன்றில்லை. புதுச்சேரியில் முதல்வர் ஒரு அங்கம் என்றால்,ஆளுநரும் ஒரு அங்கம்தான்.

சாலை விபத்துகள் அதிகரிப்பு
அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டுதான் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு டாஸ்மாக் உத்தரவிட்டது. சாலைகளை சில மாநில அரசுகள் மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை துறைமுகம்- புதுவை துறைமுகம் இடையே சரக்கு போக்குவரத்தை கையாள்வது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கலந்து கொள்ள மாட்டோம்
தவறு செய்பவர்களை அழைத்து விழா நடத்தப்படுகிறது. எனவே நிச்சயமாக திமுக விழாவிற்கு செல்ல மாட்டோம். கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் திமுக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடுகிறது.

உள்ளாட்சிக்காக...
உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்காகவே இந்தி எதிர்ப்பு, திராவிடம் உள்ளிட்ட பழைய விஷயங்களை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் இனியும் திமுகவிடம் ஏமாறமாட்டார்கள். கொடநாடு கொள்ளை, முக்கிய நபர்கள் கொலை தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி!












Click it and Unblock the Notifications