Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல்நலக் குறைவால் விவசாயிகள் மரணம் என்பதா.. அமைச்சர் பேச்சால் உறவினர்கள் கொந்தளிப்பு

உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலேயே விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் சம்பத் பேசியுள்ளார். இதற்கு மரணம் அடைந்த விவசாயிகளின் உறவினர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: பயிர்கள் கருகிய துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சம்பத் பேசிய சர்ச்சைப் பேச்சால் விவசாயிகள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

காவிரியில் இருந்து முறையாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவ மழை தாமதமாக ஆரம்பித்ததோடு, போதிய அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு நீர் இல்லாமல் காய்ந்து வருவதைக் கண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.

Farmers condemns Minister Sambath speech on farmers death

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வறட்சிக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சம்பத் விவசாயிகள் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக சர்ச்சையை உருவாக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமைச்சர் சம்பத்துக்கு விவசாயிகளை இழந்த குடும்பத்தினரும், இதர விவசாயிகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், வறட்சி பாதிப்பால் விவசாயிகள் உயிரிழந்ததை அமைச்சர் சம்பத் கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+