Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கொடுமை இது.. 14 வயது சிறுமியை பாழாக்கிய 9 குழந்தைகளின் தந்தை!

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த 65 வயது பழ வியாபாரியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நபருக்கு 9 குழந்தைகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடுர நபரின் பெயர் சலீம். கடாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். பழ வியாபாரி. பாதிக்கப்பட்ட சிறுமியை சமீபத்தில் ஆசை வார்த்தை கூறி பழக்கமாக்கிக் கொண்டார். பின்னர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

சிறுமியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். இதில் அச்சிறுமி கர்ப்பமானார். ஆனால் அது கர்ப்பம் என்று கூட அச்சிறுமிக்குத் தெரியவில்லை.

வயிற்று வலி

வயிற்று வலி

சமீபத்தில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் டாக்டரிடம் கூட்டிச் சென்றனர். டாக்டர் ஸ்கேன் எடுத்துப் பார்க்கக் கூறினார். ஸ்கேனில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர். விசாரணையில் சலீமின் அட்டகாசம் தெரிய வந்தது.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தனர். ஆனால் இந்தத் தகவல் போலீஸாருக்குப் போனது. போலீஸார் விசாரணையில் இறங்கினர். முதலில் சிறுமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கருக்கலைப்பு செய்த டாக்டர், கருக்கலைப்பு செய்ய உதவிய பெண்மணி ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். பழ வியாபாரி சலீமும் கைது செய்யப்பட்டார்.

11 முறை கைதான டுபாக்கூர்

11 முறை கைதான டுபாக்கூர் "டாக்டர்"

விசாரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டர் ஜெயவேல் போலி டாக்டர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உதவிய ஜெயலட்சுமியும் கைதானார். இந்த ஜெயவேல் இதற்கு முன்பு 11 முறை கைதானவராம்.

9 பிள்ளைகளின் தந்தை

9 பிள்ளைகளின் தந்தை

என்ன கொடுமை என்றால் சிறுமியை சீரழித்த சலீமுக்கு 9 பிள்ளைகள் உள்ளனர் என்பதுதான். தனக்குப் பேத்தி முறை வரும் சிறுமியை அவர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+